புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரமேஷ் தலைமையில் ராஜா திரையரங்கம் அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி,
உத்தரபிரதேசத்தில் கற்பழிக்கப்பட்ட இளம்பெண் பலியான விவகாரம் தொடர்பாக அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற சென்ற ராகுல்காந்தி, பிரியங்காவை போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரமேஷ் தலைமையில் ராஜா திரையரங்கம் அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
புதுவை மாணவர் காங்கிரஸ் தலைவர் கல்யாண சுந்தரம் தலைமையில் ராஜீவ்காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது அவர்கள் உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரியோகி ஆதித்யநாத்தின் உருவ பொம்மை தீயிட்டு கொளுத்தப்பட்டது. மேலும் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
காரைக்காலில் இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் சமீர் மற்றும் சிவகணேஷ் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோக செய்தனர்.