பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு: காரைக்காலில் த.மு.மு.க. ஆர்ப்பாட்டம்
காரைக்கால் பழைய ரெயில் நிலையம் அருகில் மாவட்ட த.மு.மு.க. சார்பில், மாநில செயலாளர் அப்துல் ரஹீம் தலைமையில், கருப்பு சட்டை மற்றும் கருப்பு முககவசம் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காரைக்கால்,
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி உள்பட 32 பேரை லக்னோ சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நேற்று முன்தினம் விடுதலை செய்தது. இந்த தீர்ப்பினை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, காரைக்கால் பழைய ரெயில் நிலையம் அருகில் மாவட்ட த.மு.மு.க. சார்பில், மாநில செயலாளர் அப்துல் ரஹீம் தலைமையில், கருப்பு சட்டை மற்றும் கருப்பு முககவசம் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட தலைவர் ராஜா முகமது, செயலாளர் கமால் உசேன், தி.மு.க. சிறுபான்மையினர் பிரிவு அமைப்பாளர் ஜாகிர் உசேன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் பாஸ்கரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி வணங்காமுடி, இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் மதியழகன், திராவிட கழக நிர்வாகி பன்னீர்செல்வம், எஸ்.டி.பி.ஐ. நிர்வாகி பிலால் உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். இவர்கள், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கோஷமிட்டனர்.