கொரோனா பாதிப்பு 14 லட்சத்தை தாண்டியது 11 லட்சம் பேர் குணமடைந்தனர்

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு 14 லட்சத்தை தாண்டி உள்ளது. 11 லட்சம் பேர் குணமடைந்து உள்ளனர்.

Update: 2020-10-01 21:08 GMT
மும்பை,

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இதில் நேற்று மாநிலத்தில் புதிதாக 16 ஆயிரத்து 476 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14 லட்சத்து 922 ஆக அதிகரித்து உள்ளது.

இதில் 11 லட்சத்து 4 ஆயிரத்து 426 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று மட்டும் 16 ஆயிரத்து 104 பேர் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினர்.

இதேபோல மாநிலத்தில் புதிதாக 394 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதனால் தொற்றுக்கு இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 56 ஆக உயர்ந்து உள்ளது.

மும்பையில் குறையவில்லை

மாநிலம் முழுவதும் தற்போது 21 லட்சத்து 74 ஆயிரத்து 651 பேர் வீடுகளிலும், 28 ஆயிரத்து 720 பேர் தனிமை மையங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மாநிலத்தில் தொற்று பாதிப்பு குறைந்த போதிலும் தலைநகர் மும்பையில் குறையவில்லை. நேற்று அங்கு புதிதாக 2 ஆயிரத்து 352 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் நகரில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 7 ஆயிரத்து 620 ஆக உள்ளது. இதேபோல நகரில் மேலும் 43 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதுவரை 8 ஆயிரத்து 972 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இதேபோல புனே மாநகராட்சியில் 1,069 பேருக்கும், புனே புறநகரில் 953 பேருக்கும், பிம்பிரி சிஞ்வாட்டில் 603 பேருக்கும் புதிதாக வைரஸ் நோய் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்