சேலத்தில், மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா: 378 பேருக்கு தொற்று; 7 பேர் பலி
சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவுகிறது. நேற்று ஒரே நாளில் 378 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 7 பேர் பலியாகி உள்ளனர்.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 343 பேர் நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மேலும் 378 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதாவது சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 194 பேர், எடப்பாடி ஒன்றிய பகுதியில் 3 பேர், வீரபாண்டியில் 23 பேர், ஓமலூரில் 14 பேர், சங்ககிரியில் 7 பேர், சேலம் ஒன்றிய பகுதியில் 20 பேர், மேச்சேரியில் 5 பேர், நங்கவள்ளியில் 7 பேர், காடையாம்பட்டியில் 4 பேர், தாரமங்கலத்தில் 12 பேர், கொங்கணாபுரத்தில் 2 பேர், மகுடஞ்சாவடியில் 15 பேர், ஆத்தூர் ஒன்றிய பகுதியில் 9 பேர், வாழவந்தியில் 4 பேர், பனமரத்துப்பட்டியில் 4 பேர், வாழப்பாடியில் 6 பேர், கெங்கவல்லியில் 3 பேர், பெத்தநாயக்கன்பாளையத்தில் 6 பேர், தலைவாசலில் 2 பேர், அயோத்தியாபட்டணத்தில் 15 பேர், எடப்பாடி நகராட்சியில் ஒருவர், மேட்டூர் நகராட்சியில் 17 பேர், ஆத்தூர் நகராட்சியில் 2 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் கோவையில் இருந்து சேலத்திற்கு வந்த ஒருவருக்கும், தர்மபுரியில் இருந்து வந்த சேலத்திற்கு ஒருவருக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து சேலத்திற்கு வந்த ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் இதுவரை 19 ஆயிரத்து 639 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் சிகிச்சை பெற்று வந்த 350 பேர் நேற்று குணம் அடைந்து விட்டதால் அவர்கள் அனைவரும் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வரும் நிலையில், தொற்று பாதிப்பால் நேற்று 7 பேர் பலியாகி உள்ளனர். சேலம் பகுதியை சேர்ந்த 64 வயது மூதாட்டியும், 76 வயது மூதாட்டியும், மணியனூர் பகுதியை சேர்ந்த 54 வயது ஆண் ஒருவரும், மணல்மேடு பகுதியை சேர்ந்த 87 வயது மூதாட்டியும், நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பகுதியை சேர்ந்த 54 வயது ஆண் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரி சிகிச்சை பெற்று வந்தனர். இவர்கள் 5 பேரும் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.
இதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 84 வயது முதியவரும், சேலத்தை சேர்ந்த 56 வயது ஆண் ஒருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.