மாவட்டத்தில் மேலும் 23 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மேலும் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் வரை 2 லட்சத்து 33 ஆயிரத்து 271 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 15 ஆயிரத்து 309 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 4 ஆயிரத்து 705 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை.
13 ஆயிரத்து 886 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரு முகாமில் 15 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். வீடுகளில் 40 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. விருதுநகர் ஆர்.ஆர். நகரை சேர்ந்த 31 வயது நபர், 15 வயது சிறுவன், ரோசல்பட்டியை சேர்ந்த 44 வயது நபர், சூலக்கரையை சேர்ந்த 49, 38 வயது பெண்கள், 44 வயது நபர், விருதுநகர் ஆத்துமேட்டை சேர்ந்த 51 வயது நபர், உலக்குடியை சேர்ந்த 3 பேர், ராமசாமி பட்டியை சேர்ந்த 3 பேர், அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் 47 வயது பெண், காரியாபட்டி, எம்.எம்.கோட்டை உள்பட விருதுநகர் மாவட்டம் முழுவதும் நேற்று 23 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,332 ஆக உயர்ந்துள்ளது. நேற்றுமுன்தினம் 2,046 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 4,705 பேருக்கு மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை.
இதிலிருந்து கடந்த 3 தினங்களுக்கு முன் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டவர்களுக்கும், முடிவுகள் தெரிவிக்கப்படாத நிலை உள்ளது. மருத்துவ பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் தெரிவிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.