ஜெயங்கொண்டத்தில் புதிதாக தொடங்கப்பட உள்ள அரசு கலைக்கல்லூரியில் சேர 180 மாணவர்களுக்கு விண்ணப்ப படிவம் கலெக்டர் வழங்கினார்
ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்களை 180 மாணவர்களுக்கு மாவட்ட கலெக்டர் ரத்னா வழங்கினார்.;
ஜெயங்கொண்டம்,
ஜெயங்கொண்டத்தில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க பட உள்ளது. இதையொட்டி தற்காலிகமாக கல்லூரிக்கான வகுப்புகள் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் செயல்படும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நேற்று மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ரத்னா தலைமையில் நடைபெற்றது. ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
இக்கல்லூரியில் பி.ஏ (தமிழ்) , பி.ஏ (ஆங்கிலம்) , பி.காம் ஆகிய பாடப்பிரிவுகளில் தலா 60 மாணவ, மாணவிகள் சேர்க்கையும், பி.எஸ்சி (கணிதம்) , பி.எஸ்சி (கணித அறிவியல்) ஆகிய பாடப்பிரிவுகளில் தலா 40 மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டு வருகின்றன. நேற்று ஒரு நாளில் மொத்த மாணவர் சேர்க்கை 260 -க்கு 180 மாணவர்களுக்கு விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மண்டல இணை இயக்குனர் (கல்லூரி கல்வி) உஷா, ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ராஜமூர்த்தி, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பூங்கோதை, நகராட்சி ஆணையர் அறச்செல்வி, தாசில்தார் கலைவாணன், அ.தி.மு.க. நகர செயலாளர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர்கள், வளர்ச்சி அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.