526 ஊராட்சிகளிலும் நாளை கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் - மாவட்ட கலெக்டர் உத்தரவு

526 ஊராட்சிகளிலும் நாளை கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2020-10-01 00:05 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை (வெள்ளிக்கிழமை) திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளிலும் காலை 11 மணிக்கு அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிராமசபை கூட்டத்தை நடத்த வேண்டும். இந்த கூட்டத்தில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, பல்வேறு திட்டப்பணிகள் குறித்து விவாதிக்க வேண்டும். கிராம சபை கூட்ட ஏற்பாடுகளை கண்காணிக்கவும், பார்வையிடவும் ஊராட்சி ஒன்றிய அளவில் உதவி இயக்குனர் நிலையில் மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்