புன்னக்காயலில் ரூ.55 லட்சம் செலவில் புதிய சாலை கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டினார்
ஆத்தூர் அருகே புன்னக்காயலில் ரூ.55 லட்சம் செலவில் புதிய சாலைக்கு கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டினார்.
ஆறுமுகநேரி,
ஆத்தூர் அருகே உள்ள புன்னக்காயல் கிராம பஞ்சாயத்தில் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தேர் ஓடும் ரதவீதியில் பேவர் பிளாக் சாலை அமைத்து தர வேண்டும் என்பதாகும். இதை ஏற்று திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் ரூ.55 லட்சம் மதிப்பில் புன்னக்காயலில் பேவர் பிளாக் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தார்.
கனிமொழி எம்.பி.
நேற்று மாலை சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நடந்தது. அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் புன்னக்காயல் பஞ்சாயத்து தலைவி சோபியா ஆல்வின், துணை தலைவர் மைக்கேல், பங்கு தந்தை பிராங்கிளின் அடிகளார், ஊர் கமிட்டி தலைவர் இட்டோ பர்னாந்து, ஆழ்வார்திருநகரி யூனியன் தலைவர் ஜனகர், ஒன்றிய கவுன்சிலர்கள் தாமஸ் நஸ்ரேன், மாரிமுத்து, ஆழ்வார்திருநகரி ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் நவீன்குமார், கருங்குளம் தெற்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் இசக்கி பாண்டியன், மேலாத்தூர் கிராம பஞ்சாயத்து தலைவர் சதீஷ்குமார், ஆத்தூர் நகர தி.மு.க. பொறுப்பாளர் முருகப்பெருமாள், மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், தூத்துக்குடி மாவட்ட கவுன்சிலர் பிரமசக்தி, தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.