பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு: எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் அண்ணா சிலை அருகே நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காரைக்கால்,
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தொடர்புடைய பா.ஜ.க. தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்பட அனைவரையும் லக்னோ சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் நேற்று விடுதலை செய்து தீர்ப்பு அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் அண்ணா சிலை அருகே நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநில இணை ஒருங்கிணைப்பாளர் அப்துல்லா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில செயலாளர் மவுலானா முகமது பாதுஷா, மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம், பெரியார் சிந்தனையாளர் இயக்க ஒருங்கிணைப்பாளர் தீனா, பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் அகமது அலி, எஸ்.டி.பி.ஐ. கட்சி வர்த்தக அணி மாவட்ட செயலாளர் பக்ருதீன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, பா.ஜ.க. தலைவர் விடுதலையை எதிர்த்து கண்டன கோஷம் எழுப்பப்பட்டது.
காரைக்கால் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் புதிய பஸ் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் முகமது பிலால் தலைமை தாங்கினார். நிரவி-திருமலைராயன்பட்டினம் தொகுதி தலைவர் சுல்தான் கவுஸ், பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்ட தலைவர் பகுருதீன், தொகுதி நிர்வாகிகள் செய்யது ரபி பையா, மஞ்சுர்ஷா மரைக்காயர், பக்ரூதீன், நஜிமுதீன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
முடிவில் தெற்கு தொகுதி தலைவர் மஸ்தான் நன்றி கூறினார்.