வனத்துறை அலுவலகத்தில் ஊசுடு ஏரியின் கருத்து காட்சி விளக்க மைய கட்டிடம்
வனத்துறை அலுவலகத்தில் ஊசுடு ஏரியின் கருத்து காட்சி விளக்க மைய கட்டிடம் நாராயணசாமி திறந்து வைத்தார்.
புதுச்சேரி,
புதுச்சேரி- தமிழக அரசு சார்பில் ஊசுட்டேரியில் பறவைகள் சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பறவைகள் இங்கு இனப்பெருக்கம் செய்வதற்காக வந்து செல்கின்றன. இதை நினைவுகூரும் வகையில் புதுவை அரசு வனம் மற்றும் வனவிலங்கு துறை சார்பில் வனத்துறை வளாகத்தில் ரூ.86லட்சத்து 19 ஆயிரத்து 600 செலவில் ஊசுடு ஏரியின் கருத்து காட்சி விளக்க மைய கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.
இதை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் ஷாஜகான், சிவா எம்.எல்.ஏ., வனத்துறை செயலாளர் சுந்தரவடிவேலு, வனக்காப்பாளர் மற்றும் தலைமை வனவிலங்கு பாதுகாவலர் சத்தியமூர்த்தி, துணை வனக்காப்பாளர் வஞ்சுளவல்லி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த மையத்தின் நுழைவாயிலில் நீர் மற்றும் நிலப்பரப்பில் வசிக்கும் பறவைகளான மஞ்சள் மூக்கு நாரை, வெண்மார்பு மீன்கொத்தி, அரிவாள் மூக்கன் உள்ளிட்ட 12 வகையான பறவைகளின் ஓவியம் வரையப்பட்டுள்ளது. பறவைகள், விலங்குகளின் உருவங்களும் தத்ரூபமாக உருவங்கள் வடிவமைத்து வைக்கப்பட்டுள்ளன.
மேலும் ஊசுடு ஏரி பறவைகள் சரணாலயம் குறித்து 20 நிமிடம் ஓடக்கூடிய வீடியோ படமும் காட்டப்படுகிறது.