பேரிகை அருகே, பாத்திர வியாபாரி கள்ளத்தொடர்பால் கொலை செய்யப்பட்டாரா? போலீசார் தீவிர விசாரணை

பேரிகை அருகே இறந்து கிடந்த பாத்திர வியாபாரி கள்ளத்தொடர்பு காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2020-09-30 12:45 GMT
ஓசூர்,

கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் கனபுரா அருகே உள்ள கனடு பக்கமுள்ளது ஆலமாரனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் என்கிற சங்குமணி (வயது 27). இவர் சூளகிரி அருகே அலசப்பள்ளியில் தங்கி பாத்திர வியாபாரம் செய்து வந்தார். இவருக்கும், ஏ.செட்டிப்பள்ளியைச் சேர்ந்த 25 வயதுடைய திருமணம் ஆன பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஏ.செட்டிப்பள்ளியில் அந்த பெண்ணை பார்ப்பதற்காக சீனிவாசன் சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஏ.செட்டிப்பள்ளி ஏரி அருகில் சீனிவாசன் பிணமாக கிடந்தார். அவர் உடல் மீது பெரிய கல் ஒன்று கிடந்தது.

இதனால் கள்ளத்தொடர்பு விவகாரத்தில் அவரை யாரேனும் கொலை செய்திருக்கலாம் என உறவினர்கள் சந்தேகிக்கிறார்கள். இதையடுத்து பேரிகை போலீசார் அவரடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சீனிவாசனின் அக்கா கெம்பம்மா (37) கொடுத்த புகாரின் பேரில் பேரிகை போலீசார் சந்தேக மரணம் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்