சிறைக்காவலர் கொலை வழக்கு: முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மகன் உள்பட 5 பேர் கோர்ட்டில் சரண்
சிறைக்காவலர் கொலை வழக்கில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மகன் உள்பட 5 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் அடுத்த பழையசீவரம் பகுதியை சேர்ந்தவர் இன்பரசன் (வயது 29). இவர் சென்னை புழல் சிறையில் சிறைக்காவலராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை மர்ம நபர்களால் அவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இன்பரசனை கொன்ற குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் செங்கல்பட்டு-காஞ்சீபுரம் சாலை பழைய சீவரம் பகுதியில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பாலூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையே பழைய சீவரம் கலைஞர் குடியிருப்பு 3-வது தெருவை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் மகன் வரதராஜன் (30) , அம்பேத்கர் தெருவை சேர்ந்த சுந்தர் மகன் செந்தில் (27), கலைஞர் குடியிருப்பு 4-வது தெருவை சேர்ந்த சேட்டு மகன் ஜான்சன் (23), அண்ணாதுரை மகன் ராஜதுரை (29), பஜனைகோவில் தெருவை சேர்ந்த மகேந்திரன் மகன் விக்னேஷ் (24) ஆகிய 5 பேரும் வக்கீல்கள் கார்த்திகேயன், ராஜகுரு ஆகியோருடன் நேற்று காலை தஞ்சை ஒருங்கிணைந்த கோர்ட்டுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் 5 பேரும் தஞ்சை 2-வது நீதித்துறை நடுவர் கோர்ட்டில் நீதிபதி மோசஸ் ஜெபசிங் முன்னிலையில் சரண் அடைந்தனர். இவர்கள் 5 பேரையும் அடுத்த மாதம் 5-ந் தேதி வரை கோர்ட்டு காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். அதன்படி அவர்கள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேனில் அழைத்து செல்லப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருச்சி மத்திய சிறையில் வருகிற 5-ந் தேதி வரை கோர்ட்டு காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்ததால் கோர்ட்டில் இருந்து பலத்த பாதுகாப்புடன் 5 பேரையும் போலீசார் வெளியே அழைத்து வந்தனர். துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோர்ட்டு வளாகத்தில் நின்ற போலீஸ் வேனில் 5 பேரும் ஏற்றப்பட்டனர். இவர்கள் முக கவசம் அணிந்து இருந்தனர். சமூக இடைவெளியுடன் இருக்கைக்கு ஒருவர் என தனித்தனி இருக்கையில் 5 பேரும் அமர்ந்தனர்.
அதேபோல் போலீசாரும் வேனில் ஏறிய பிறகு ஆயுதப்படை போலீஸ்காரர் வேனை இயக்கினார். ஆனால் பழுது ஏற்பட்டதால் வேன் நகரவில்லை. இதனால் வேனில் இருந்து போலீஸ்காரர்கள் கீழே இறங்கினர். அவர்களுடன் வக்கீல்கள் சிலரும் சேர்ந்து வேனை தள்ளி சென்றபோது வேனை போலீஸ்காரர் இயக்கினார். உடனே வேன் ‘ஸ்டார்ட்’ ஆனது. பின்னர் போலீஸ்காரர்கள் மீண்டும் வேனில் ஏறியவுடன் திருச்சியை நோக்கி புறப்பட்டு சென்றது.