நெல்லையில் ஒரே நாளில் 127 பேருக்கு கொரோனா தென்காசி, தூத்துக்குடியில் 111 பேர் பாதிப்பு

நெல்லையில் ஒரே நாளில் 127 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. தென்காசி, தூத்துக்குடியில் 111 பேர் பாதிக்கப்பட்டனர்.

Update: 2020-09-30 00:02 GMT
நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் மின்சார வாரிய ஊழியர்கள் 10 பேர் உள்பட 127 பேருக்கு நேற்று புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் பணியாற்றியவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் 101 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்கள். ஒரு முதியவர் இறந்துள்ளார்.

கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் நெல்லை அரசு, தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்றுடன் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 645 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 11 ஆயிரத்து 563 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 882 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 200 பேர் இறந்துள்ளனர்.

தென்காசி- தூத்துக்குடி

தென்காசி மாவட்டத்தில் தனியார் நிறுவன ஊழியர்கள் 7 பேர் உள்பட 68 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. ஒரு முதியவர் இறந்துள்ளார். மாவட்டத்தில் இதுவரை 7ஆயிரத்து 283 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சை முடிந்து 6 ஆயிரத்து 699 பேர் வீடு திரும்பி உள்ளனர். 447 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 137 பேர் இறந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 43 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்து 360 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 12 ஆயிரத்து 675 பேர் முழுமையாக குணமடைந்து உள்ளனர். 563 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மொத்தம் 122 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக இறந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்