மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு: தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் - மாவட்டத்தில் 34 இடங்களில் நடந்தது

மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களை கண்டித்து நாமக்கல் மாவட்டத்தில் 34 இடங்களில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2020-09-29 05:15 GMT
நாமக்கல், 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் திருத்த சட்டங்களை கண்டித்தும், அவற்றை திரும்பபெற வலியுறுத்தியும் நேற்று தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதன்படி நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் நாமக்கல் அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் தலைமை தாங்கினார். சின்ராஜ் எம்.பி., முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் பார் இளங்கோவன், மாநில விவசாய தொழிலாளர் அணி இணை செயலாளர் கைலாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் பெரியசாமி, காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ஷேக்நவீத், ம.தி.மு.க. பழனிசாமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி குழந்தான், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் மணிமாறன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன், தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் உடையவர், முன்னாள் எம்.எல்.ஏ. சரஸ்வதி, செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பல்வேறு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மகளிர் அணியினர், வார்டு செயலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் டிராக்டர், ஏர் கலப்பை, மண்வெட்டி மற்றும் கரும்பு உள்ளிட்ட உபகரணங்கள் மற்றும் பயிர்களுடன் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

ராசிபுரம் பழைய பஸ்நிலையம் அருகே தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர தி.மு.க. செயலாளர் சங்கர் தலைமை தாங்கினார். நகர காங்கிரஸ் தலைவர் ஸ்ரீராமுலு முரளி, ம.தி.மு.க. நகர செயலாளர் ஜோதிபாசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் கந்தசாமி, இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் மணிமாறன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் ஆதவன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மாவட்ட கலை இலக்கிய அணி அமைப்பாளர் ரங்கசாமி, அக்ரி நடராஜன், டாக்டர் மதிவேந்தன், தி.மு.க. மருத்துவ அணி அமைப்பாளர் ராஜேஷ் பாபு, முன்னாள் காங்கிரஸ் கட்சியின் மாவட்டத்தலைவர் வக்கீல் பாச்சல் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல ராசிபுரம் அருகே ஆண்டகலூர் கேட்டில் ஒன்றிய தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ராசிபுரம் ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தி.மு.க. பொருளாளர் வக்கீல் செல்வம், மாவட்ட வர்த்தக அணி துண அமைப்பாளர் அருள், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் வனிதா செங்கோட்டையன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் பூபதி, ஒன்றிய துணை செயலாளர்கள் சிவகுமார், அருளரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். வெண்ணந்தூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் துரைசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

திருச்செங்கோடு நகர, ஒன்றிய தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் திருச்செங்கோட்டில் உள்ள அண்ணா சிலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பரமத்திவேலூர் சட்டமன்ற உறுப்பினருமான கே.எஸ். மூர்த்தி தலைமை தாங்கி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பேசினார். இதில் நகர தி.மு.க. பொறுப்பாளர் கார்த்திகேயன், முன்னாள் நகர் மன்ற தலைவர் நடேசன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் தனபால், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ரங்கசாமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் மணிவேல், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் குருசாமி, கணேசன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜவேல், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் காமராஜ், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட பொருளாளர் மகபூப் செரீப், ஆதித்தமிழர் பேரவையின் மாநில துணை பொதுச்செயலாளர் செல்வ வில்லாளன், மாவட்ட செயலாளர் சுரேஷ், தமிழ்ப்புலிகள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எலச்சிபாளையம் ஒன்றியத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் தங்கவேல் தலைமை தாங்கினார். இதில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர் பூபதி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வேல்முருகன், ஒன்றிய செயலாளர்கள் அசோக்குமார், சுப்பிரமணி மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மல்லசமுத்திரம் அண்ணா சிலை அருகே முன்னாள் பேரூராட்சி தலைவர் திருமலை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய தி.மு.க. அவைத்தலைவர் கிருஷ்ணன், ஒன்றிய ம.தி.மு.க. செயலாளர் வைகோ கணேசன், காங்கிரஸ் தலைவர் ராஜா, கொங்குநாடு மக்கள் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் ரஞ்சித், மற்றும் கூட்டணிக் கட்சியினர் திரளானோர் கைகளில் கொடியும், சமூக இடைவெளியை கடைப்பிடித்து கோஷங்கள் எழுப்பினர்.

சேந்தமங்கலம் ஒன்றிய தி.மு.க. சார்பில் பேளுக்குறிச்சி பஸ் நிறுத்தத்தில் தி.மு.க.வினர் கூட்டணி கட்சிகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒன்றிய தி.மு.க. செயலாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். வட்டார காங்கிரஸ் தலைவர் சாமி ஜெகநாதன், கனகராஜ், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் மனோகரன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட கவுன்சிலர் ராசாத்தி அருள்மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஜெயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பேளுக்குறிச்சி தி.மு.க. ஊராட்சி செயலாளர் நல்லு ராஜேந்திரன், சேந்தமங்கலம் ஒன்றியக்குழுத் தலைவர் மணிமாலா சின்னுசாமி, துணைத்தலைவர் கீதா வெங்கடேஸ்வரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் துத்திக்குளம் குணசேகரன், நடுகோம்பை அழகப்பன், பொம்மசமுத்திரம் செந்தில்குமார் உள்பட கூட்டணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது மரவள்ளிக்கிழங்கு மற்றும் கரும்புகளை வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

குமாரபாளையத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் பள்ளிபாளையம் பிரிவு ரோட்டில் நடைபெற்றது. நகர திமுக பொறுப்புக்குழு தலைவர் மாணிக்கம் தலைமை தாங்கினார். முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஜெகநாதன், தொழில் அதிபர் இளவரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொறுப்பாளர் செல்வம் வரவேற்றார். இதில் காங்கிரஸ் நகர தலைவர் ஜானகிராமன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாகிகள் ஈஸ்வரன், வக்கில் கார்த்திகேயன், திராவிடர் கழக தலைவர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொறுப்புக்குழு உறுப்பினர் ரவி நன்றி கூறினார்.

இதேபோல பள்ளிபாளையம் பஸ் நிலையம் 4 ரோட்டில் நேற்று தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர தி.மு.க. செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி அசோகன், காங்கிரஸ் கட்சி பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் குமார் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தி.மு.க. அவைத்தலைவர் குலோப்ஜான், இளைஞர் அணி வினோத்குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சி செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வெங்கடேஷ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மோகனூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் எஸ்.வாழவந்தி செல்லும் பிரிவு ரோடு அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேற்கு ஒன்றிய செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். இதில் பொதுக்குழு உறுப்பினர் அம்பிகா பாண்டியன், ஒன்றியக்குழு உறுப்பினர் வசந்தி குணசேகரன், செங்கப்பள்ளி ஊராட்சி தலைவர், நந்தகுமார் மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

கந்தம்பாளையம் அருகே வசந்தபுரம் பஸ் நிறுத்தத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பரமத்தி ஒன்றிய தி.மு.க. செயலாளர் தனராசு தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த 60-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ம.தி.மு.க. பொறுப்பாளர் பொன்னுசாமி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்