வேளாண் திருத்த சட்டத்துக்கு எதிராக முழுஅடைப்பு கர்நாடகத்தில் விவசாயிகள் போராட்டம் - பஸ்-ஆட்டோக்கள் ஓடின
மத்திய-மாநில அரசுகளின் வேளாண் சட்டங்களை கண்டித்து விவசாயசங்கத்தினர் கர்நாடகத்தில்நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். இதையொட்டி விவசாய சங்கத்தினர் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்- கண்டன ஊர்வலம் நடத்தினர். முழுஅடைப்புபோராட்டம் நடந்தாலும் பஸ்கள்-ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடின.
பெங்களூரு,
மத்திய அரசு புதிதாக வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளது.
இதற்கு நாடு முழுவதும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோல் கர்நாடக அரசும் நில சீர்திருத்த சட்ட திருத்தம், வேளாண் சந்தை சட்ட திருத்த மசோதா ஆகியவற்றை சட்டசபையில் நிறைவேற்றியுள்ளது.
இந்த வேளாண் சட்டங்களை கண்டித்து கர்நாடகத்தில் 28-ந்தேதி (அதாவது இன்று) முழு அடைப்பு நடத்தப்படும் என்று விவசாய சங்கங்களின் ஐக்கிய போராட்ட குழு கடந்த வாரம் அறிவித்தது. அதன்படி கர்நாடகத்தில் நேற்று விவசாய சங்கங்கள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டன. முழுஅடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டாலும் பெங்களூருவில் பஸ், ஆட்டோ, கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் வழக்கம் போல் ஓடின.
பெங்களூருவில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. மக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தனியார் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவையும் செயல்பட்டன. இதற்கிடையே பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பில் பெங்களூருவில் ஊர்வலம் நடைபெற்றது.
டவுன் ஹால் பகுதியில் இருந்து சுதந்திர பூங்கா வரை இந்த ஊர்வலம் நடைபெற்றது. இதில் கர்நாடக விவசாயிகள் சங்கத தலைவர் கோடிஹள்ளி சந்திரசேகர் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், பல்வேறு கன்னட சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். இந்த ஊர்வலத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த ஊர்வலம் முடிந்த பிறகு சுதந்திர பூங்காவில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பேசினர்.
இந்த ஊர்வலத்தையொட்டி மைசூரு வங்கி சர்க்கிள் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் மத்திய- மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். சுதந்திர பூங்காவில் விவசாயிகள் சங்க தலைவர் கோடிஹள்ளி சந்திரசேகர் பேசும்போது கூறியதாவது:-
மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக 3 புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டங்களால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அவர்களின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் ஏமாற்றப்படுவார்கள்.
விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்பட வேண்டிய மத்திய அரசு இவ்வாறு நடந்து கொள்வது கடும் கண்டனத்துக்குரியது. விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறிய பிரதமர் மோடி விவசாயிகளை நாசப்படுத்த முயற்சி செய்து வருகிறார்.
இது சரியல்ல. மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டங்களை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். மேலும் மத்திய அரசின் வழியில் கர்நாடக அரசு நில சீர்திருத்த சட்ட திருத்தம், வேளாண்மை சந்தைகள் சட்ட திருத்தம் ஆகிய மசோதாக்களை கொண்டு வந்துள்ளது.
தான் ஒரு விவசாயி என்று கூறிக்கொள்ளும் முதல்-மந்திரி எடியூரப்பா விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வந்து எங்கள் சமூகத்திற்கு அநீதி இழைத்து விட்டார். மத்திய-மாநில அரசுகள் இந்த வேளாண் சட்டங்களை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுக்கிறேன். இவ்வாறு கோடிஹள்ளி சந்திரசேகர் கூறினார்.
பெங்களூருவை போல், மண்டியா, பல்லாரி, பெலகாவி, தார்வார், மைசூரு, சிவமொக்கா, சிக்கமகளூரு, ஹாவேரி, துமகூரு, ராமநகர் உள்பட மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் திரண்டு வந்து ஊர்வலம் நடத்தினர். மாநிலம் முழுவதும் பஸ் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் வழக்கம் போல் ஓடின. மக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சில பகுதிகளில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். போராட்டங்களில் ஈடுபட்டு விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். பிறகு அவர்களை மாலையில் விடுவித்தனர்.