அவினாசியில் மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை ஆன்லைன் பாடங்களை படிக்க பெற்றோர் வற்புறுத்தியதால் விபரீதம்
அவினாசியில் ஆன்லைன் வகுப்பு வீட்டுப்பாடங்களை படிக்கச்சொல்லி பெற்றோர் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டான். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.
அவினாசி,
திருப்பூர் மாவட்டம் அவினாசி பி.எஸ்.சுந்தரம் வீதியை சேர்ந்தவர் செந்தில்நாதன் (வயது 45). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு வங்கியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பிரதிபா (39) என்ற மனைவியும், சஞ்சய் (15), நவீன் (13), வருண் (9) என்ற 3 மகன்களும் உள்ளனர். அவினாசி எம்.நாதம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சஞ்சய் 10-ம் வகுப்பும், நவீன்-8.ம் வகுப்பும், வருண் 4-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
10-ம் வகுப்பு படிக்கும் சஞ்சய் ஆன்லைன் வகுப்பில் சரிவர படிக்காமல் செல்போனில் விளையாடுவது, வெளியில் சென்று நண்பர்களுடன் விளையாடுவதிலேயே அதிக கவனம் செலுத்தி வந்துள்ளான். வருகிற 1-ந்தேதி பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் சஞ்சய் ஆன்லைன் வகுப்பில் தனக்கு கொடுத்த வகுப்பு பாடம் மற்றும் வீட்டுப்பாடங்களை ஒழுங்காக படிக்காமல் இருந்து வந்துள்ளான்.
இதனால் பெற்றோர் விளையாடுவதை விட்டு, விட்டு ஒழுங்காக படிக்குமாறு சஞ்சயை பலமுறை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் சஞ்சய் மனம் உடைந்த நிலையில் இருந்து வந்துள்ளான். இந்த நிலையில் நேற்றுகாலை வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறி மாட்டுவதற்காக போடப்பட்டிருந்த இரும்பு சட்டத்தில் சஞ்சய் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டான்.
இது குறித்து தகவல் அறிந்த அவினாசி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சஞ்சயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.