மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருப்பணிக்கு கருங்கற்கள் வெட்டும் பணி களரம்பள்ளி மலையடிவாரத்தில் பூமிபூஜை அமைச்சர்கள் பங்கேற்பு
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருப்பணிக்காக ராசிபுரம் அருகே களரம்பள்ளியில் கருங்கற்கள் வெட்டும் பணிக்கான பூமிபூஜை நடந்தது. இதில் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், சரோஜா ஆகியோர் பங்கேற்றனர்.
ராசிபுரம்,
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மண்டப திருப்பணிக்காக கற்களை தேர்வு செய்ய சென்னை ஐ.ஐ.டி. நிறுவனம் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டது. ஆய்வில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பட்டணம் பேரூராட்சிக்குட்பட்ட களரம்பள்ளி மலையடிவாரத்தில் தரமான கற்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருப்பணிக்காக ஒரு லட்சம் கனஅடி கற்களை களரம்பள்ளியில் இருந்து வெட்டி எடுக்க திட்டமிடப்பட்டது.
இதனிடையே நேற்று அங்கு கருங்கற்களை வெட்டி எடுப்பதற்கான பூமிபூஜை நடந்தது. இதில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர். இங்கிருந்து 23 அடி உயரம் கொண்ட 16 கல் தூண்களுக்கு தேவையான கருங்கற்கள் ஓராண்டில் வெட்டி எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமைச்சர் உதயகுமார் பேட்டி
தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:- கருங்கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு மதுரை சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு அனுப்பி வைக்கப்படும். ரூ.18 கோடி மதிப்பீட்டில் இந்த பணிகள் நடைபெறும். பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு பாரத ரத்னா விருது வழங்குவது பற்றி மத்திய அரசு தான் முடிவு செய்யும். தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் பேரில்தான் நாளை (இன்று) அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
இதில் ஏ.கே.பி.சின்ராஜ் எம்.பி., நாமக்கல் கலெக்டர் மெகராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி, உதவி கலெக்டர் கோட்டைக்குமார், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையர் செல்லதுரை, சேலம் மண்டல இணை ஆணையர் நடராஜன், நாமக்கல் மாவட்ட உதவி ஆணையர் தமிழரசு, தாசில்தார் பாஸ்கர், ராசிபுரம் நகர கூட்டுறவு வங்கித்தலைவர் பாலசுப்பிரமணியன், வீட்டுவசதி சங்கத்தலைவர் கோபால், பட்டணம் பேரூர் அ.தி.மு.க. செயலாளர் பாலசுப்பிரமணியன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் முருகேசன், ராசிபுரம் ஒன்றிய மகளிர் அணி செயலாளர் பாலாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆண்டகளூர் கேட்டில் அமைச்சர் உதயகுமாருக்கு, அமைச்சர் சரோஜா தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.