காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று 21 ஆயிரத்தை தாண்டியது ஒரே நாளில் 196 பேருக்கு தொற்று

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 196 பேர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியது.

Update: 2020-09-27 22:50 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 30, 20 வயதுடைய வாலிபர்கள் மற்றும் 13 வயது சிறுவன், மாடம்பாக்கம் ஊராட்சி பகுதியை சேர்ந்த 32 வயது ஆண், 80 வயது மூதாட்டி, 30 வயது பெண் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இருப்பது உறுதியானது.

மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 196 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21 ஆயிரத்து 593 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 20 ஆயிரத்து 340 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 309 ஆக உயர்ந்தது. 944 பேர் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 296 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34 ஆயிரத்து 578 ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில் 31 ஆயிரத்து 678 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 542 ஆக உயர்ந்தது. 2 ஆயிரத்து 358 பேர் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்