திருவாரூர் அருகே ஆண்டிப்பாளையத்தில் பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி திருவாரூர் அருகே ஆண்டிப்பாளையத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-09-27 12:19 GMT
திருவாரூர்,

2019-20 ஆண்டிற்கான பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை திருவாரூர் மாவட்டத்திற்கு ரூ.201 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் மாவட்டத்தில் உள்ள 573 வருவாய் கிராமங்களில் 360 கிராமங்களுக்கு மட்டும் இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது. மீதமுள்ள 213 வருவாய் கிராமங்களுக்கு முற்றிலும் இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. எனவே விடுபட்ட கிராமங்களுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்கிட கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆர்ப்பாட்டம்

இதன் தொடர்ச்சியாக திருவாரூர் ஒன்றியம் அடியக்கமங்கலம், கருப்பூர், அலிவலம் ஊராட்சிக்குட்பட்ட விவசாயிகளுக்கு 2018-19-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கப்படாததை கண்டித்தும்், உடனடியாக வழங்கக்கோரியும் திருவாரூர்் அருகே ஆண்டிப்பாளையத்தில்் அனைத்து விவசாயிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி தலைமை தாங்கினார். இதில் அனைத்து விவசாயிகள் கலந்துகொண்டு இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்