முசிறி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா
முசிறி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செல்வராஜூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முசிறி,
திருச்சி மாவட்டம் முசிறி தொகுதி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராக பதவி வகிப்பவர் எம்.செல்வராஜ்.
கொரோனோ வைரஸ் தொற்று பரவல் தற்போது அதிகரித்து காணப்படும் நிலையில் அண்மையில் சென்னையில் கலைவாணர் அரங்கில் நடந்த தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் எம்.எல்.ஏ. செல்வராஜ் கலந்து கொண்டு திரும்பினார். அப்போது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை.
கொரோனா தொற்று
மேலும் அவர் கடந்த சிலதினங்களாக முசிறி தொகுதியில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்ப்பு நிகழ்ச்சிக்காக கட்சித் நிர்வாகிகளுடன் சென்றார். மேலும் முசிறியில் உள்ள தனது அலுவலகத்தில் அவர் வழக்கம் போல் பொதுமக்களை சந்தித்தும் வந்துள்ளார்.
இந்தநிலையில் சென்னையில் நாளை 28-ந்தேதி நடைபெறும் அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் எம்.எல்.ஏ. செல்வராஜ் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். நேற்று பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி படுத்தப்பட்டது. இதையடுத்து அவர் திருச்சியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார். இது, அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.