கரூர் மாவட்டத்தில் புதிதாக 47 பேருக்கு கொரோனா தொற்று தொடரும் அதிகரிப்பால் பொதுமக்கள் அச்சம்

கரூர் மாவட்டத்தில் புதிததாக 47 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தொடரும் அதிகரிப்பால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Update: 2020-09-27 11:51 GMT
கரூர்,

கரூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இந்தநிலையில் நேற்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள பட்டியலில் கரூர் மாவட்டத்தில் புதிதாக 47 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. தெரியவந்துள்ளது. அதன்விவரம் பின்வருமாறு:-

வேலாயுதம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 33 வயது பெண், 4 வயது பெண் குழந்தை, 15 வயது சிறுமி, 43 வயது பெண், 42 வயது ஆண், 28 வயது இளம்பெண் என 6 பேருக்கும், கரூர் காந்தி கிராமத்தைச் சேர்ந்த 52 வயது ஆண், 69 வயது மூதாட்டி, 25 வயது இளம்பெண், 59 வயது பெண் என 4 பேருக்கும், கரூர் ஜவகர் பஜார் பகுதியை சேர்ந்த 60 வயது முதியவர், 33 வயது பெண், 34 வயது வாலிபர், 65 வயது மூதாட்டி, 70 வயது முதியவர் என 5 பேருக்கும், தாந்தோணி மலையைச் சேர்ந்த 72 வயது முதியவர், 27 வயது வாலிபர், 45 வயது ஆண் என 3 பேருக்கும்.

கிருஷ்ணராயபுரம்

கரூர் காந்திபுரம் பகுதியை சேர்ந்த 44 வயது ஆண், சின்ன ஆண்டான்கோவில் ரோடு பகுதியைச் சேர்ந்த 38 வயது ஆண், 70 வயது முதியவர், காளியப்பனூரை சேர்ந்த 39 வயது பெண், பெத்தாட்சி நகரை சேர்ந்த 36 வயது பெண், வடக்கு பாளையத்தை சேர்ந்த 80 வயது மூதாட்டி, சேங்கள் பகுதியைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி, திருமாநிலையூர் பகுதியை சேர்ந்த 70 வயது முதியவர்.

மணவாடியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், வி.வி.ஜி நகரை சேர்ந்த 24 வயது வாலிபர், பெட்டவாய்த்தலையை சேர்ந்த 16 வயது சிறுமி, கொசூரை சேர்ந்த 70 வயது முதியவர், வையாபுரி நகரைச் சார்ந்த 72 வயது மூதாட்டி, கடலூரைச் சேர்ந்த 70 வயது முதியவர், கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்த 28 வயது வாலிபர் உள்பட 47 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்