நில சீர்திருத்தம்-வேளாண் சட்ட திருத்த மசோதாக்கள் கர்நாடக சட்டசபையில் நிறைவேறியது காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே கர்நாடக சட்டசபையில் நில சீர்திருத்த சட்டம் மற்றும் வேளாண் சந்தைகள் சட்ட திருத்த மசோதாக்கள் நிறைவேறியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் பெங்களூரு விதான சவுதாவில் கடந்த 21-ந்தேதி தொடங்கியது. சட்டசபை கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று சட்டசபையில் நேற்று மாநில அரசு நில சீர்திருத்த மசோதாவை தாக்கல் செய்தது. அதன் மீது விவாதம் நடைபெற்றது.
இந்த சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்பட காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த மசோதாவை வாபஸ் பெற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். சித்தராமையா பேசும்போது கூறியதாவது:-
நில சீர்திருத்த சட்ட திருத்த மசோதாவை அரசு கொண்டு வந்துள்ளது. இது விவசாயிகளுக்கு மரண சாசனம். இந்த சட்டம் அமலுக்கு வந்தால் விவசாய நிலம் பெரு நிறுவனங்களின் முதலாளிகளின் கைகளுக்கு சென்றுவிடும். இந்த திருத்த மசோதாவுக்கு மந்திரிசபையில் ஒப்புதல் வழங்கியபோதே, இதை எக்காரணம் கொண்டும் அமல்படுத்த விடக்கூடாது என்று நாங்கள் தீர்மானித்தோம். இது மக்கள் விரோத மசோதா. இந்த சட்ட திருத்தம் குறித்து விவசாயிகள், தொழிலாளர்களிடம் பேசினோம். இவர்கள் இதை கடுமையாக எதிர்க்கிறார்கள்.
யாருடனும் ஆலோசனை நடத்தாமலேயே இந்த சட்ட திருத்த மசோதாவை அரசு கொண்டு வந்துள்ளது. நிலம் தொடர்பாக 13 ஆயிரத்து 816 வழக்குகள் பல்வேறு கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ளன. இந்த சட்ட திருத்த மசோதா அமலுக்கு வந்தால், இந்த வழக்குகள் எல்லாம் போய்விடும். இந்த சட்ட திருத்தத்தின் பின்னால் பெரு நிறுவனங்களின் அழுத்தம் உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது.
நாங்கள் சிறுவர்களாக இருக்கும்போது, விவசாயம் செய்வது எப்படி என்று சொல்லிக்கொடுத்தனர். ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் முதலாளிகள் விவசாய நிலத்தை வாங்க கட்டுப்பாடுகள் இருக்கின்றன. இந்த சட்ட திருத்தத்தில் விவசாய நிலத்தை வாங்குபவர்கள் அதே நோக்கத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனை இல்லை. விவசாய நிலத்தை ரியல் எஸ்டேட் தொழிலுக்கு பயன்படுத்த அனுமதி வழங்கக்கூடாது.
அவ்வாறு நடந்தால், அது உணவு உற்பத்தி மீது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இத்தகைய விவசாய விரோத சட்டத்திற்கு நாங்கள் ஒப்புதல் வழங்க வேண்டுமா?. தனியார் நிறுவனங்களுடன் கர்நாடக அரசு கூட்டு சேர்ந்து, விவசாயிகள் சமூகத்தை நாசப்படுத்த முயற்சி செய்துள்ளது. இந்த சட்ட திருத்தம் குறித்து வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக்கிற்கு தெரியவில்லை. இது, ஒருங்கிணைந்த கர்நாடகம் உருவாக்கப்பட்டபோது கொண்டுவரப்பட்ட சட்டம். முதலில் கர்நாடகத்தின் வரலாற்றை தெரிந்துகொள்ள வேண்டும்.
ஒருங்கிணைந்த கர்நாடகம் உருவாகும் வரை, நமது மாநிலம் பல்வேறு பகுதிகளாக பிரிந்து கிடந்தது. 1956-ம் ஆண்டு இந்த பகுதிகள் அனைத்தும் ஒருங்கிணைப்பட்டு, ஒருங்கிணைந்த கர்நாடகம் உருவாக்கப்பட்டது. 1973-ம் ஆண்டு, நிலத்தை உழுபவர்களின் அதன் உரிமையாளர் என்ற அறிவிப்போடு நில சீர்திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டது. இவ்வாறு சித்தராமையா பேசினார்.
இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு ஜனதா தளம்(எஸ்) தலைவர் குமாரசாமியும் கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசினார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே சட்டசபையில், நில சீர்திருத்த மசோதா நிறைவேறியது. இதைதொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மேலும் வருகிற 28-ந்தேதி முழுஅடைப்புக்கும் விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த நிலையில் இந்த நில சீர்திருத்த சட்ட திருத்தம் மசோதா கர்நாடக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மதிய உணவு இடைவெளிக்கு பிறகு மீண்டும் சட்டசபை கூடியது. அப்போது சட்டசபையில் நேற்று கூட்டுறவுத்துறை மந்திரி எஸ்.டி.சோமசேகர், வேளாண் சந்தைகள் சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்தார்.
அந்த மசோதா மீது எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசும்போது, “இந்த வேளாண் சந்தைகள் சட்ட திருத்த மசோதா விவசாயிகளுக்கு எதிரானது. அவர்கள் இதுவரை தங்களின் விளைபொருட்களை வேளாண் சந்தைகளுக்கு கொண்டு வந்து விற்பனை செய்தனர். அங்கு அவர்களுக்கு சட்ட பாதுகாப்பு உள்ளது. இந்த சட்ட திருத்தம் மூலம், தனியார் நிறுவனங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இருக்காது. அவர்கள் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அந்த நிறுவனங்கள் விளைபொருட்களை வாங்கி பதுக்க முடியும். விவசாயிகளுக்கு விளைபொருட்களுக்கு தகுந்த விலை கிடைக்காது“ என்றார்.
இந்த விவாதத்திற்கு பதிலளித்து பேசிய மந்திரி எஸ்.டி.சோமசேகர், “இந்த வேளாண் சந்தைகள் சட்ட திருத்த மசோதா மூலம் விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்து கொள்ளலாம். இதனால் அவர்களுக்கு நல்ல விலை கிடைக்கும். அவர்களால் அதிக லாபம் ஈட்ட முடியும். எதிர்க்கட்சிகள் கூறுவது போல் இது விவசாயிகளுக்கு எதிரானது. விவசாயிகளுக்கு அரசு வழங்கும் ஆதார விலை நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும். அதனால் விவசாயிகள் பயப்பட தேவை இல்லை“ என்றார்.
மந்திரியின் பதில் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதற்கிடையே அந்த வேளாண் சந்தைகள் சட்ட திருத்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.