விஷம் கலந்து கொடுக்கப்பட்ட உணவை சாப்பிட்ட மேலும் ஒரு குழந்தை சாவு - தாய் தற்கொலை முயற்சி
ஓட்டப்பிடாரம் அருகே குடும்ப தகராறில் விஷம் கலந்து கொடுக்கப்பட்ட உணவை சாப்பிட்ட மேலும் ஒரு குழந்தை பரிதாபமாக இறந்தது. இதனால் வேதனை அடைந்த தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
ஓட்டப்பிடாரம்,
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள சிவகளை பகுதியைச் சேர்ந்தவர் வீரமாரியப்பன் (வயது 36). இவர் குடும்பத்துடன் கடந்த 3 ஆண்டுகளாக ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பசுவந்தனை நகரில் வசித்து வருகிறார். இவருடைய மனைவி மகாலட்சுமி (31). இவர்களுக்கு பாலாவிசாலி (11), ஸ்ரீநிதி (10), கவிபாலன் (6) ஆகிய குழந்தைகள் உண்டு. வீரமாரியப்பன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறிய அளவில் ஓட்டல் நடத்தி வந்துள்ளார். இதில் நஷ்டம் ஏற்பட்டதால் தொழிலை விட்டுவிட்டு லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் வீரமாரியப்பன் சரிவர வேலைக்கு செல்லவில்லை. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் வெறுப்படைந்த மகாலட்சுமி இரவில் விஷம் சாப்பிட்டு விட்டு தனது குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார். இதில் அவர்கள் மயங்கினார்கள்.
இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் வீட்டுக்கு வந்து அங்கு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மகாலட்சுமி, குழந்தைகளை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி கவிபாலன் கடந்த 18-ந் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பசுவந்தனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
மேலும் தூத்துக்குடி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த பாலாவிசாலி, ஸ்ரீநிதி ஆகிய குழந்தைகள் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பாலாவிசாலி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதை அறிந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மகாலட்சுமி ஆஸ்பத்திரில் இருந்து நேற்று காலை தப்பி ஓடி தூத்துக்குடி அருகே உள்ள மீளவிட்டான் ரெயில்வே தண்டவாளத்தில் பூச்சிக்கொல்லி மருந்துடன் சென்றுள்ளார்.
அங்குள்ள காட்டுப்பகுதியில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதை பார்த்த அப்பகுதியினர் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.