தாய் இறந்த ஏக்கத்தில் தீக்குளித்த மகன் சாவு
தாய் இறந்த ஏக்கத்தில் தீக்குளித்த மகன் உயிரிழந்தார்.
நொய்யல்,
கரூர் மாவட்டம், புன்னம் சத்திரத்திலிருந்து காகித ஆலை செல்லும் வழியில் உள்ள கொங்கு நகரை சேர்ந்தவர் கவியரசு (வயது 20). இவர் புகளூர் காகித ஆலையில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவரது தாய் பழனியம்மாள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால், கவியரசு தாய் இல்லாத ஏக்கத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், கடந்த 16-ந் தேதி மதியம் தனது உடலில் மண்எண்ணெய்யை ஊற்றிக் கொண்டு கவியரசு தீக்குளித்தார். இதில், பலத்த தீக்காயம் அடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை கவியரசு உயிரிழந்தார். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.