பிரமாண பத்திர உறுதிமொழியை மீறி குற்ற செயலில் ஈடுபட்டவருக்கு 314 நாள் சிறை துணை கமிஷனர் உத்தரவு

பிரமாண பத்திர உறுதிமொழியை மீறி குற்ற செயலில் ஈடுபட்டவருக்கு 314 நாட்கள் சிறை தண்டனை விதித்து போலீஸ் துணை கமிஷனர் உத்தரவிட்டார்.

Update: 2020-09-26 00:48 GMT
திருவொற்றியூர்,

சென்னை கொருக்குப்பேட்டை நைனியப்பன் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 47). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர், வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் சுப்புலட்சுமி முன்னிலையில் ஆஜராகி, இன்னும் ஓராண்டுக்கு எந்த வித குற்றச்செயல்களிலும் ஈடுபடமாட்டேன் என பிரமாண உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்தார்.

ஆனால் கடந்த 20-ந் தேதி திலீப் என்பவரிடம் தகராறில் ஈடுபட்டதாக கொருக்குப்பேட்டை போலீசார் ரமேசை கைது செய்தனர். பிரமாண பத்திர உறுதிமொழியை மீறி மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்ட ரமேசை 314 நாட்கள் சிறையில் அடைக்க துணை கமிஷனர் சுப்புலட்சுமி உத்தரவிட்டார்.

அதேபோல் தண்டையார்பேட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்த டேவிட் (23), நரேஷ்குமார் (21) ஆகியோரும் ஒரு ஆண்டுக்கு குற்ற செயலில் ஈடுபட மாட்டோம் என பிரமாண உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்தனர்.

ஆனால் பிரமாண பத்திர உறுதிமொழியை மீறி குற்றச்செயலில் ஈடுபட்ட டேவிட்டுக்கு 131 நாட்கள் சிறையும், நரேஷ்குமாருக்கு 163 நாட்கள் சிறை தண்டனையும் விதித்து துணை கமிஷனர் சுப்புலட்சுமி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்