கருவடிக்குப்பத்தில் கூடுதல் எரிவாயு தகனமேடை ஒரே நாளில் 15 பிணங்களை எரிக்கலாம்
கருவடிக்குப்பம் சுடுகாட்டில் கூடுதலாக எரிவாயு தகன மேடை அமைக்கப்படுகிறது. இதில் ஒரே நாளில் 15 பிணங்களை எரிக்கலாம்.
புதுச்சேரி,
புதுவை கருவடிக்குப்பத்தில் உள்ள சுடுகாட்டில் நாள் ஒன்றுக்கு 5-க்கும் குறையாமல் பிணங்கள் எரியூட்டப்பட்டு வந்தன. இங்கு பாரம்பரிய முறைப்படி விறகுகளை வைத்தே பிணங்கள் தகனம் செய்யப்பட்டு வந்தன. இதனால் புகை மண்டலம் உருவாகி சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்பட்டதால் அங்கு தனியாக கியாஸ் (எரிவாயு) மற்றும் மின் தகன மேடைகள் அமைக்கப்பட்டு உடல்கள் எரியூட்டப்பட்டு வந்தன.
இந்தநிலையில் மின் தகன மேடை அடிக்கடி பழுதாகி வந்தது. மின்சார பயன்பாடும் அதிகமாக தேவைப்பட்டது. தற்போது கொரோனாவினால் மரணமடைபவர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 5-க்கும் குறையாமல் உள்ளது. சில நாட்களில் 10-ஐ தாண்டுகிறது. இதனால் பிணங்களை எரிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. ஏனெனில் தற்போதுள்ள மின் தகன மேடையில் நாள் ஒன்றுக்கு 5 பிணங்கள் மட்டுமே எரிக்கப்படக் கூடியதாக அமைக்கப்பட்டு இருந்தது.
ஏற்கனவே பழுதாகி இருந்தநிலையில் தற்போது பயன்பாடு அதிகமாகி விட்டபடியால் மின்தகன மேடை மேலும் பழுதானது. எனவே அதற்கு பதில் எரிவாயு தகனமேடையாக மாற்ற திட்டமிடப்பட்டது. தற்போது அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் முடிந்து இன்னும் 10 நாட்களில் எரிவாயு தகன மேடை பயன்பாட்டிற்கு வந்துவிடும்.
இந்த பணிகளை உழவர்கரை நகராட்சி செயற்பொறியாளர் குணசேகரன், இளநிலை பொறியாளர் ஜெய்சங்கர், கூட்டுறவு சர்க்கரை ஆலையின் முன்னாள் மேலாளர் ரவி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இந்த நவீன எரிவாயு தகன மேடையில் ஒரு மணிநேரத்தில் ஒரு பிணத்தை எரித்துவிடலாம். நாள் ஒன்றுக்கு 8 முதல் 10 பிணங்களை எரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த புதிய தகனமேடை பயன்பாட்டிற்கு வரும்போது அதில் 10, மின் தகனமேடையில் 5 என ஒரேநாளில் 15 பிணங்களை எரிக்கலாம்.