கயத்தாறில் ‘அம்மா’ நகரும் ரேஷன் கடை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்
கயத்தாறில் ‘அம்மா‘ நகரும் ரேஷன் கடையை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
கயத்தாறு,
கயத்தாறு பேரூராட்சி வடக்கு சுப்பிரமணியபுரத்தில் அம்மா நகரும் ரேஷன் கடை தொடக்க விழா நடந்தது. செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு, ரேஷன் கடையை தொடங்கி வைத்தார். முன்னதாக அகிலாண்டபுரம் பஞ்சாயத்து சத்திரப்பட்டி கிராமத்தில் அம்மா நகரும் ரேஷன் கடையை தொடங்கி வைத்து பொருட்கள் வழங்கினார்.
அப்போது, அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறுகையில், ‘தூத்துக்குடி மாவட்டத்தில் முதன் முதலாக இங்கு தான் அம்மா நகரும் ரேஷன் கடை தொடங்கப்பட்டு உள்ளது. இந்த மாவட்டத்தில் மொத்தம் 84 அம்மா நகரும் ரேஷன் கடைகள் செயல்படும். இதனால் ஏராளமான மக்கள் பயன்பெறுவார்கள். மக்களிடம் மீண்டும் மீண்டும் கூறுகிறேன் முககவசம் இல்லாமல் வெளியில் எங்கும் செல்லக்கூடாது. முககவசம் நமக்கு உயிர் காக்கும் கவசம்‘ என்றார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, சின்னப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் மோகன், கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, கயத்தாறு தாசில்தார் பாஸ்கரன், கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் வினோபாஜி, கிழக்கு ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்பசாமி, மாவட்ட கவுன்சிலர்கள் சந்திரசேகர், பிரியா குருராஜ், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் செல்வகுமார், மாணவர் அணி ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன், ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் கண்ணன், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் ஆசூர் காளிப்பாண்டியன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட விவசாய அணி செயலாளர் மாரியப்பன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பூமாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி அருகே மேல பாண்டவர்மங்கலத்தில் அம்மா நகரும் ரேஷன் தொடக்க விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு, அம்மா நகரும் ரேஷன் கடை சேவையை தொடங்கி வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்களை வழங்கினார்.
இதில் சின்னப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், உதவி கலெக்டர் விஜயா, தாசில்தார் மணிகண்டன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாணிக்கவாசகம், விஜயா, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், துணை தலைவர் கணேஷ் பாண்டியன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சத்யா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் தங்கமாரியம்மாள், சந்திரசேகர், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், துணை தலைவர் பழனிச்சாமி, பாண்டவர்மங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் அன்புராஜ், ஊராட்சி தலைவர் கவிதா, துணை தலைவர் ராஜலட்சுமி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வகுமார், நகர அ.தி.மு.க. செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரைப்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-
நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்க தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட போது, அதனை நிர்வாகம் செய்ய சட்ட விதிமுறைகளின்படி அரசு பதிவாளரை நியமனம் செய்தது. நடிகர் சங்க தேர்தலுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு செய்தது மட்டுமின்றி, இருதரப்புக்கும் பிரச்சினை எழுந்ததும் அரசு பாதுகாப்பு வழங்கியது. மேலும் இருதரப்பும் பேசி சுமுகமாக முடிவெடுக்க வேண்டும் என்று அரசு பலமுறை கோரிக்கை வைத்தது. இதையே தான் நீதிமன்றமும் சொல்லி உள்ளது. இன்னமும் கால அவகாசம் உள்ளது. அவர்கள் அமர்ந்து பேசி முடிவுக்கு வந்தால் சுமுகமாக தீர்வு காண அரசு உறுதுணையாக இருக்கும்.
தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. 10 சட்டமன்ற தேர்தல்களை நேருக்கு நேர் சந்தித்து உள்ளது. இதில் 7 முறை அ.தி.மு.க.வும், 3 முறை தி.மு.க.வும் வெற்றி பெற்றுள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். அ.தி.மு.க.வை சேர்ந்தவர் தான் முதல்-அமைச்சராக இருப்பார் என்ற நிலைதான் நாட்டு மக்களிடையே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.