திருச்செந்தூர் மணிமண்டபத்தில் 85-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்: டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை அமைச்சர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்தார்
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் 85-வது பிறந்தநாள் விழா அரசு சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, திருச்செந்தூர் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
திருச்செந்தூர்,
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் ரூ.1.67 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த பிப்ரவரி மாதம் 22-ந்தேதி திறந்து வைத்தார்.
தொடர்ந்து அவரது பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 24-ந் தேதி ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி, திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில் நேற்று காலை டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் எஸ்.பி.சண்முகநாதன், சின்னப்பன், இன்பதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் வெண்கல முழுஉருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கொரோனா தடுப்பு பணிக்காக, திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு 2 ஆம்புலன்சுகளை வழங்கி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவின் நம்பர் ஒன் நாளிதழ் என்ற பெருமை படைத்த ‘தினத்தந்தி’ நாளிதழை ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் வழியில், தனயன் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சிறப்பாக நடத்தினார். அவர் கடந்த 1959-ம் ஆண்டு நிர்வாகப் பொறுப்பை ஏற்ற பிறகு பத்திரிகை உலகின் ஜாம்பவானாக, ஆன்மிகச் செம்மல், கொடை வள்ளல், கல்வித்தந்தை, கைப்பந்தாட்ட கழக தலைவர், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் என்று பல்வேறு சிறப்புகளை பெற்று மக்களுக்கு தொண்டாற்றினார். மேலும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால் 1982-1983-ம் ஆண்டு சென்னை மாநகர ஷெரீப் என்ற உயரிய பட்டம், பத்மஸ்ரீ விருது போன்ற பல்வேறு சிறப்புகளை பெற்றவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்.
தென்மாவட்ட மக்கள் நீண்ட காலமாக அவரது புகழை நிலைநாட்டும் வகையில், அவருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தலைவர்களுக்கு சிலை வைப்பது, அரசு விழா நடத்துவது போன்ற சிறப்புகளை செய்து வந்தார்.
அவரது வழியில் தற்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தென் மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று 22.11.2017 அன்று தூத்துக்குடியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் மக்களின் கோரிக்கையை, எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் மணிமண்டபம் கட்டப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார். அந்த அறிவிப்பை தொடர்ந்து செய்தி துறை சார்பில் பணிகள் முடிக்கப்பட்டு மணிமண்டபம் அமைக்கப்பட்டது.
கோரிக்கை வைக்காமலேயே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சி.பா.ஆதித்தனாரின் பிறந்த நாளையும், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாளையும் அரசு விழாவாக அறிவித்து பெருமை சேர்த்தார். அந்த அறிவிப்புக்கு பிறகு முதல் அரசு விழாவாக தற்போது மகிழ்வோடு கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு, டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 85-வது பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடுவதற்கு வழி செய்துள்ளது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இன்பதுரை எம்.எல்.ஏ. கூறுகையில், “பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் கல்வி, ஆன்மிகம், விளையாட்டு, பத்திரிகை என பல்வேறு துறைகளிலும் சாதனை புரிந்தவர். அவரது சாதனைகளுக்காக இந்த விழா நடைபெறுகிறது. டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நம்முடன் இல்லாவிட்டாலும், அவரது சாதனைகள் நம்மிடையே என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைத்து பெருமைப்படுத்தி உள்ளார். தமிழ் சமுதாயம் சார்பில், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் நினைவை என்றும் போற்றுவோம்“ என்றார்.
விழாவில் திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்பிரியா, தாசில்தார் ஞானராஜ், அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுகநயினார், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட வக்கீல் பிரிவு தலைவர் சுகந்தன் ஆதித்தன், செயலாளர் யு.எஸ்.சேகர், மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் செல்வகுமார், சிறுபான்மை பிரிவு செயலாளர் பிரபாகர், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் வீரபாகு, துணை செயலாளர் வெயிலுமுத்து,
திருச்செந்தூர் யூனியன் தலைவர் செல்வி வடமலை பாண்டியன், யூனியன் துணை தலைவர் ரெஜிபர்ட் பர்னாந்து, ஒன்றிய செயலாளர்கள் திருச்செந்தூர் ராமச்சந்திரன், ஆழ்வார்திருநகரி விஜயகுமார், உடன்குடி தாமோதரன், நகர செயலாளர்கள் திருச்செந்தூர் மகேந்திரன், ஆறுமுகநேரி ரவிச்சந்திரன், காயல்பட்டினம் காயல் மவுலானா, கானம் செந்தமிழ் சேகர், ஒன்றிய பொருளாளர் பழக்கடை திருப்பதி, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கோட்டை மணிகண்டன், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் சுரேஷ்பாபு,
மாவட்ட அவைத்தலைவர் அமலிராஜன், மாவட்ட பொருளாளர் ஜெபமாலை, மாவட்ட இணை செயலாளர் செரினா சி.த.பாக்கியராஜ், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் மகாலிங்கம், காயல்பட்டினம் கூட்டுறவு சங்க தலைவர் பூந்தோட்டம் மனோகரன், ஒன்றிய துணை செயலாளர் கார்த்திக், வக்கீல்கள் ஜேசுராஜ், ரவிச்சந்திரன், ஒன்றிய மகளிர் அணி செயலாளர் ராணி, ஒன்றிய கவுன்சிலர் செல்வன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் விக்னேஷ், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் கணேசன், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் லட்சுமணன், பிச்சிவிளை கூட்டுறவு சங்க தலைவர் தேவராஜ், கல்லூர் வேலாயுதம், அந்தோணி அமல்ராஜ், தமிழ் மாநில காங்கிரஸ் வட்டார தலைவர் சுந்தரலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாளையொட்டி, திருச்செந்தூரில் உள்ள அவரது மணிமண்டபம் முழுவதும் வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
விழாவில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதனால் திருச்செந்தூர் நகரம் விழாக்கோலம் பூண்டது.