டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா
தூத்துக்குடி மாவட்டத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
கயத்தாறு,
கயத்தாறு புதிய பஸ் நிலையத்தில், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அவரது உருவப்படத்திற்கு கயத்தாறு ஒன்றிய நாடார் பேரவை தலைவர் தேவசகாயம்பவுன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கயத்தாறு தி.மு.க. நகர செயலாளர் சுரேஷ்கண்ணன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் செல்வகுமார், மாவட்ட பிரதிநிதி ஜமாலூதீன், தொ.மு.ச. பொருளாளர் சாகுல்ஹமீது, முன்னாள் நகர பஞ்சாயத்து கவுன்சிலர் ரத்தினசாமி, காங்கிரஸ் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் தனுஷ்கோடி நாடார், முன்னாள் ராணுவ வீரர் ஊர்காவலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி நகரம் மற்றும் வேலாயுதபுரம் தமிழ்நாடு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. கோவில்பட்டி செக்கடி தெருவில் நடந்த விழாவுக்கு மன்ற தலைவர் முருகன் தலைமை தாங்கினார். உத்தரகுமார் முன்னிலை வகித்தார். மன்ற மாவட்ட துணைத்தலைவர் தவமணி கலந்துகொண்டு இனிப்பு வழங்கினார். விழாவில் மன்ற நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
சாத்தான்குளத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் வேணுகோபால் தலைமை தாங்கினார். ராஜா சேனாதிபதி முன்னிலை வகித்தார். கேரள மாநில முன்னாள் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ராஜபாண்டி இனிப்பு வழங்கினார். விழாவில் மூத்த வக்கீல் இளங்கோ, சுந்தர், வட்டார மனிதநேயம் மன்ற இணை செயலாளர் ஜான், அரவிந்தன், கணேஷ்குமார், மைக்கேல், பெனிட்ன், ஆசிரியர் டைட்டஸ் கிலாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா கழக அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ், மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் ரவிசேகர், மாநில கலை இலக்கிய அணி செயலாளர் அந்தோணிபிச்சை ஆகியோர் கலந்துகொண்டு, அலங்கரிக்கப்பட்ட டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியதுடன், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு புத்தக பைகளையும், ஆதரவற்ற பெண்களுக்கு இலவச அரிசி மற்றும் உதவித்தொகையையும் வழங்கினர். 42 முறை ரத்ததானம் செய்த தனராஜ் என்பவரை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அவைத்தலைவர் கண்டிவேல், பொருளாளர் அருண்சுரேஷ்குமார், துணை செயலாளர்கள் அருள்ராஜ், ராஜசேகரன் மற்றும் பழனிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.