தி.மு.க. உறுப்பினர் சேர்க்கும் முகாம் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
ராஜபாளையம், சாத்தூரில் நடைபெற்ற தி.மு.க. உறுப்பினர் சேர்க்கும் முகாமில் சட்டமன்ற உறுப்பினர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கப்பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ராஜபாளையம்,
விருதுநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆன்லைன் மூலம் உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் சாத்தூரில் நடைபெற்றது. இந்த முகாமில் விருதுநகா் தெற்கு மாவட்ட செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய உறுப்பினா்களுக்கு அடையாள அட்டையை வழங்கினார்.
முகாமில் சாத்தூர் நகர செயலாளர் குருசாமி, சாத்தூர் கிழக்கு ஒன்றியச்செயலாளர் முருகேசன், மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபாண்டியன் (பொறுப்பு), கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார், தி.மு.க. கலை பகுத்தறிவு அணி அமைப்பாளர் அசோக், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் வேலுச்சாமி, சாத்தூர் ஒன்றிய கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை மாவட்ட முன்னாள் சேர்மன் கடற்கரை ராஜ் செய்திருந்தார்.
ராஜபாளையத்தில் இணைய வழி மூலமாக தி.மு.க. உறுப்பினர் சேர்க்கையை விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், சாத்தூர் சட்ட மன்ற உறுப்பினருமான ராமச்சந்திரன் தொடங்கி வைத்து புதிய உறுப்பினர் அட்டையை வழங்கினார்.
முகாமில் எஸ்.தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. தனுஷ்கோடி, ஒன்றிய தலைவர் சிங்கராஜ், துணைத்தலைவர் துரை கற்பகராஜ், நகர செயலாளர் ராமமூர்த்தி, ரமேஷ், கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கசாமி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன், நகர் நிர்வாகிகள் மாரியப்பன், சரவணன் பதிவுஜமால், பன்னீர் செல்வம், ஷியாம் ராஜா, மணிகண்டராஜா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.