ராணிப்பேட்டை மாவட்டத்தில், மேலும் 60 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 12,559 ஆக உயர்வு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று 60 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 12,559 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-09-24 11:15 GMT
ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்து 559 ஆக உயர்ந்துள்ளது. இதில், 518 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 757 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 2,300 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரொனா தொற்றுஅதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் மாவட்டத்தில் 65 பேருக்கு கொரொனா உறுதிசெய்யப்பட்டத. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4505 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 74 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேபோல் குடியாத்தம் தாலுகாவில் நேற்று 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி சுண்ணாம்புபேட்டையில் 2 பேர், கோபலாபுரம், தாழையாத்தம், அசோக்நகர், கார்த்திகேயபுரம் தலா ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்