தாராவியில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை நெல்லையை சேர்ந்தவர்

தாராவியில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இவர் நெல்லை மாவட்டம் மாவடியை சேர்ந்தவர் ஆவார்.

Update: 2020-09-23 23:09 GMT
மும்பை,

மும்பை தாராவி காமராஜர் சால் பகுதியை சேர்ந்தவர் நண்பன்துரை (வயது24). லிப்ட் கம்பெனியில் ஊழியராக வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களாக தோள்பட்டை வலி காரணமாக அவதி அடைந்து வந்தார். இது பற்றி தன்னுடன் தங்கி இருந்த நண்பர்களிடம் தெரிவித்து உள்ளார். இந்தநிலையில் நேற்று காலை தூங்க செல்வதாக கூறி விட்டு அறைக்கு சென்று உள்ளார்.

வேலைக்கு சென்றிருந்த அவரது நண்பர்கள் மாலையில் வீட்டிற்கு வந்தனர். கதவை தட்டிய போது வெகுநேரமாக திறக்க வில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே பார்த்த போது நண்பன்துரை வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி தாராவி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரை மீட்டு அருகில் உள்ள சயான் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில் அவர் விஷம் குடித்து உயிரிழந்தது தெரியவந்தது.

இதனால் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தாராவியில் நண்பன்துரை இருந்த அறையில் சோதனை நடத்தினர்.

இச்சோதனையில் அவரது அறையில் இருந்த செல்போனை கைப்பற்றி போலீசார் நடத்திய சோதனையில் அவர் சாகும் முன்பு பதிவு செய்த வீடியோ ஒன்று இருந்தது. இதில் எனது சாவிற்கு யாரும் காரணமில்லை என தெரிவித்து இருந்தார்.

இந்த தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட வாலிபர் நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அருகே உள்ள மாவடியை சேர்ந்த பாலகிருஷ்ணனின் மகன் என்று தெரியவந்தது.

மேலும் செய்திகள்