சிக்பள்ளாப்பூர் சுசபலியா பெட்டாவில் அனுமதி இன்றி அமைத்த பெரிய சிலுவை அகற்றம் - கிறிஸ்துவர்கள் போராட்டத்தால் பரபரப்பு
சிக்பள்ளாப்பூர் சுசபலியா பெட்டாவில் அனுமதி இன்றி அமைத்திருந்த பெரிய சிலுவையை அதிகாரிகள் அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிறிஸ்துவர்கள் போராட்டம் நடத்தியதாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சிக்பள்ளாப்பூர்,
சிக்பள்ளாப்பூர் (மாவட்டம்) அருகே சுசபலியா பெட்டா என்ற மலை உள்ளது. இந்த மலைப் பகுதியில் அந்தப் பகுதியை சேர்ந்த கிறிஸ்துவ மக்கள் சார்பில் மிகப்பெரிய சிலுவை ஒன்று வைக்கப்பட்டு உள்ளது. அந்த சிலுவை உள்ள இடத்தில் கிறிஸ்துவர் சிறப்பு பிரார்த்தனை செய்து வழிபாடு நடத்தி வந்தனர். இந்த நிலையில் அந்த சிலுவை அரசு நிலத்தை ஆக்கிரமித்து அனுமதி இல்லாமல் வைத்திருப்பதாகவும், எனவே அதனை அகற்ற வேண்டும் என்றும் ஒருவர், கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதாவது அந்த நிலத்தை அரசு மாடுகள் மேய்ச்சலுக்காக வழங்கியதாகவும், அந்த நிலத்தை ஆக்கிரமித்து சிலுவை அமைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த வழக்கை விசாரித்து வந்த ஐகோர்ட்டு நேற்று அதிரடி தீர்ப்பை வழங்கியது. அதாவது, சுசபலியா பெட்டாவில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வைத்துள்ள சிலுவையை அகற்ற வேண்டும் என்று சிக்பள்ளாப்பூர் கலெக்டருக்கு உத்தரவிட்டது. அதன்படி உதவி கலெக்டர் ரகுநந்தன் தலைமையில் அதிகாரிகள் நேற்று மதியம் அங்கு சென்றனர். பின்னர் அவர்கள் அந்த சிலுவையை அகற்ற முயன்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான கிறிஸ்துவர்கள் அங்கு திரண்டு வந்து போராட்டம் நடத்தினர். அவர்கள் எக்காரணம் கொண்டும் சிலுவையை அகற்ற கூடாது என கோஷங்கள் எழுப்பினர். மேலும் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு மிதுன்குமார் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர்.
அவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், ஐகோர்ட்டு உத்தரவுப்படி அரசு நிலத்தை ஆக்கிரமித்து வைத்த சிலுவை அகற்றப்படுகிறது. இதை மீறி போராட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்யப்படுவீர்கள் என எச்சரித்தனர். அதையடுத்து போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
அதைதொடர்ந்து அதிகாரிகள், மலை மீது வைத்திருந்த சிலுவையை அகற்றினர். அப்போது அங்கு கூடியிருந்த கிறிஸ்துவர்கள் கண்ணீர் விட்டு கதறியபடி பிரார்த்தனை செய்த வண்ணம் இருந்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அந்தப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இதனால் அங்கு போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.