ராசிபுரத்தில் நடமாடும் ரேஷன் கடைகள் சேவை - அமைச்சர் சரோஜா தொடங்கி வைத்தார்
ராசிபுரத்தில் நடமாடும் ரேஷன் கடைகள் வாகன சேவையை அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ராசிபுரம்,
ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர்கேட்டில் நடமாடும் ரேஷன் கடைகள் வாகன சேவை தொடக்க விழா நடந்தது. விழாவில் முன்னாள் எம்.பி.யும், மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவருமான பி.ஆர்.சுந்தரம் முன்னிலை வகித்தார். இதில் சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா கலந்து கொண்டு, 3 நடமாடும் ரேஷன் கடை வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பயனாளிகளுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். இந்த 3 வாகனங்கள் ராசிபுரம் ஒன்றியம் முத்துக்காளிப்பட்டிக்கும், நாமகிரிபேட்டை ஒன்றியம் தண்ணீர்பந்தல்காட்டுக்கும், வெண்ணந்தூர் ஒன்றியம் அலவாய்ப்பட்டிக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.
விழாவில் ராசிபுரம் நகர கூட்டுறவு வங்கி தலைவரும், நகர அ.தி.மு.க. செயலாளருமான பாலசுப்பிரமணியன், ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்கள் வக்கீல் தாமோதரன், கே.பி.எஸ்.சரவணன், மசக்காளிப்பட்டி கூட்டுறவு சங்க தலைவர் பிரகாசம், முன்னாள் எம்.எல்.ஏ. கலாவதி, ராசிபுரம் ஒன்றிய மகளிர் அணி செயலாளர் பாலாமணி, மாவட்ட மகளிர் அணி துணை தலைவர் ராதாசந்திரசேகர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வேம்புசேகரன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பொன்குறிச்சி முருகேசன், சிங்களாந்தபுரம் ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பா மகுடீஸ்வரன், ராசிபுரம் ஜெயலலிதா பேரவை செயலாளர் வடுகம் பாலன், ஒன்றிய இணை செயலாளர் முத்தாயி குமார், பட்டணம் பேரூர் செயலாளர் பாலசுப்பிரமணியன், சின்னப்பையன், ஒப்பந்ததாரர் மகேந்திரன், கூட்டுறவு சங்க தலைவர்கள் கோபால், ராஜா என்கிற கண்ணன், ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் சுந்தரவேல், கவுண்டம்பாளையம் நல்லதம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல் ராசிபுரம் நகரில் ஆர்.சி.எம்.எஸ். சார்பில் இயங்கும் 1, 2, 4, 12 ஆகிய ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு முக கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா குடும்ப அட்டைதாரர்களுக்கு முக கவசங்களை வழங்கினார். இதில் ஆர்.சி.எம்.எஸ். நிர்வாக இயக்குனர் பாலசுப்பிரமணி, பொது மேலாளர் பாண்டியன், பொது விநியோக திட்ட பிரிவு அலுவலர் குணசேகரன், சார் பதிவாளர்கள் திருமுருகன், குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக ராசிபுரத்தில் உள்ள சட்டமன்ற அலுவலகத்தில் அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்தும், கட்சி பணிகள் குறித்தும் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் பி.ஆர்.சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி பேசினர். இதில் நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.