பாளையங்கோட்டை அருகே புதுப்பெண்ணுக்கு கத்திக்குத்து; வாலிபர் கைது

பாளையங்கோட்டை அருகே புதுப்பெண்ணுக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2020-09-22 03:30 IST
நெல்லை,

நெல்லை டவுன் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் சாலமோன். இவருடைய மனைவி வசந்தி (வயது 23). இவர் கிள்ளிக்குளத்தில் உள்ள கல்லூரியில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த நிலையில் நேற்று வசந்தி தனது மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். பாளையங்கோட்டையை அடுத்துள்ள அரியகுளம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த சிங்கிகுளத்தை சேர்ந்த பாலமுருகன் மகன் சக்திகுமார் (25) என்பவர் அவரை வழிமறித்து தகராறு செய்தார்.

அப்போது திடீரென சக்திகுமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், வசந்தியை சரமாரியாக குத்தி விட்டு தப்பிச் சென்றுவிட்டார். இதில் காயமடைந்த வசந்தியை, அக்கம்பக்கத்தினர் மீட்டு பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்தி குமாரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்