கொரோனா முகாமில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆய்வு; முகக்கவசம், சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தல்

கொரோனா முகாமில் திடீர் ஆய்வு மேற்கொண்ட புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி முகக்கவசம், சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தினார்.

Update: 2020-09-20 12:34 GMT
புதுச்சேரி,

புதுச்சேரியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு புதிய கொரோனா பரிசோதனை முகாம்கள் தொடங்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் நடைபெற்ற கொரோனா பரிசோதனை முகாமில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது மருத்துவ அதிகாரிகளிடம் பரிசோதனைகள் குறித்து கேட்டறிந்த முதல்வர் நாராயணசாமி, முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றினால் கொரோனா பரவாது என்று அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்