முன்சுருக்க திருத்தப் பணிகள்: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்

வாக்காளர் பட்டியல் முன்சுருக்க திருத்தப் பணிகள் நடந்து வருவதால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

Update: 2020-09-20 06:05 GMT
தேனி,

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதியை தகுதி நாளாக கொண்டு வாக் காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப் பணிகள் நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு அதன் முன்சுருக்க திருத்தப் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. எனவே ஜனவரி 1-ந்தேதி அன்று 18 வயது பூர்த்தி அடையும் நபர்கள் தங்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவம் 6-ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

ஏற்கனவே பட்டியலில் இடம் பெற்று வேறு சட்டமன்ற தொகுதிக்கு இடம்பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள், இரட்டைப்பதிவு உள்ளவர்கள் ஆகியோர் படிவம்-7, பெயர், முகவரி மற்றும் உறவு முறை ஆகியவற்றில் திருத்தம் மேற்கொள்ள வடிவம் 8, ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் இடம் பெயர்ந்தவர்களுக்கு படிவம் 8ஏ ஆகியவற்றை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

இறுதி பட்டியல்

இந்த விண்ணப்ப படிவங் களை வாக்காளர் பதிவு அலுவலர், சப்-கலெக்டர், ஆர்.டி. ஓ., உதவி வாக்காளர் பதிவு அலுவலர், தாசில்தார், நகராட்சி ஆணையாளர் ஆகியோரின் அலுவலகங்களிலும், www.nvsp.in என்ற இணையதளத்தின் வாயிலாகவும் சமர்ப்பிக்கலாம்.

இதைத்தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 16-ந்தேதி வெளியிடப்படும். வரைவு வாக்காளர் பட்டியல் மீது பெறப்படும் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனை தொடர்பான மனுக்கள் மீதான முடிவுகள் ஜனவரி 5-ந்தேதிக்குள் ஒப்புதல் பெறப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 20-ந்தேதி வெளியிடப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்