புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை யொட்டி பெருமாள் கோவிலில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.;
புதுக்கோட்டை,
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்ததாகும். இந்த மாதத்தில் பெருமாள் பக்தர்கள் அசைவ உணவை தவிர்த்து சைவ உணவு மட்டும் சாப்பிட்டு விரதம் இருப்பது வழக்கம். பொதுவாக சனிக் கிழமைகளில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். இருப்பினும் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் பிரசித்தி பெற்றவை. இதனால் புரட்டாசி மாத சனிக் கிழமைகளில் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெறும். அந்த வகையில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை யொட்டி புதுக்கோட்டையில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. கீழ 3-ம் வீதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று காலை சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. மூலஸ்தானத்தில் பெருமாள், உற்சவர் பெருந்தேவி சமேத வரதராஜர், தாயார் ஸ்ரீதேவி, பூதேவி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி யளித்தனர். உற்சவர் வரதராஜர் கருட சேவையில் காட்சியளித்தார்.
பக்தர்கள் சாமி தரிசனம்
தற்போது கொரோனா கால கட்டம் என்பதால் அரசின் அறிவுரைகள், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாடுகளின் படி கோவில்கள் பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப் பட்டுள்ளன. அந்த வகையில் வரதராஜ பெருமாள் கோவிலில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடை பிடிக்கப்பட்டன.
கோவில் நுழைவுவாயிலில் பக்தர்களின் உடல் வெப்ப நிலையை தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் சோதனையிடப் பட்டு அனுமதிக்கப்பட்டனர். மேலும் கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி கொடுத்தனர். பக்தர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வந்திருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வரிசையில் செல்வதற்கு வசதியாக தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.
துளசி, தீர்த்தம் கொடுக்கப்படவில்லை
இதேபோல் விட்டோபா பெருமாள் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. ரகுமாயி சமேத பாண்டு ரெங்கன் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டிருந்தது. பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்தனர். இதேபோல் திருக்கோர்ணம் உள்பட நகரப்பகுதியில் ஆங்காங்கே உள்ள சிறிய பெருமாள் கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. ஆஞ்சநேயர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பெருமாள் கோவில்களில் தரிசனத்திற்கு பின் துளசி, தீர்த்தம் கொடுக்கப்படும். மேலும் ஜடாரியை பக்தர்கள் தலையில் வைத்து பட்டர்கள் ஆசி வழங்குவது உண்டு. தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தீர்த்தம், துளசி இலை, ஜடாரி வைத்தல் தற்காலிகமாக நிறுத்தப் பட்டுள்ளது. பக்தர்கள் பெருமாளுக்கு பிடித்தமான துளசி இலையை வாங்கி வந்து கோவில் வளாகத்தில் உள்ள ஒரு இடத்தில் வைத்து, மனமுருகி வேண்டி வழிபட்டனர்.
பொன்னமராவதி, திருவரங்குளம், வடகாடு
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு பொன்னமராவதியில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத அழகப்பெருமாள் கோவிலில், நாராயண அய்யங்கார் தலைமையில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. இதையடுத்து பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் வேகுப்பட்டி மற்றும் மேலைச்சிவபுரி கல்யாண சுந்தரராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. நகரத்தார்கள் அவரவர் வீடுகளில் சிறப்பு பூஜை நடத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
திருவரங்குளம் அருகே மேட்டுப்பட்டியில் உள்ள ராமானுஜர் கோவிலில் நேற்று அதிகாலை யாகபூஜை நடத்தி, திருமலை வெங்கடாசலபதியை எழுந்தருள செய்து தேங்காய், பழம், பூக்கள் வைத்து வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பெருமாளுக்கு மகா தீபம் காட்டப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சுந்தர ராமானுஜர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
வடகாடு அருகே ஆலங்காட்டில் உள்ள வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் நேற்று பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பொங்கல் வைத்து பூஜைகள் நடைபெற்றன. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.