அதிக மாணவர்கள் சேர்க்கை எதிரொலி: அரசு பள்ளிக்கூடங்களில் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்களா?
அரசு பள்ளிக்கூடங்களில் அதிக மாணவர்கள் சேர்க்கை இருப்பதால் கூடுதலாக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.;
ஈரோடு,
கொரோனா தொற்று பாதிப்பு நாடு முழுவதும் மிகப்பெரிய பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பொருளாதார இழப்பு, வேலை இருப்பு, வருவாய் இழப்பு என்று பல்வேறு பிரச்சினைகளில் சிக்கும் நடுத்தர குடும்பத்தினர் தங்கள் வருவாயில் பெரும் பங்கினை செலவழிக்கும் கல்வி குறித்து சிந்திக்க தொடங்கி உள்ளனர். நல்ல வருவாய் உள்ள வேலையில் இருக்கும்போது சுலபமாக தனியார் பள்ளிக்கூடங்களில் தங்கள் குழந்தைகளை சேர்த்த பலரும், கொரோனா இழப்பு காரணமாக அரசு பள்ளிக்கூடங்கள் மீது தங்கள் கவனத்தை திருப்பி உள்ளனர்.
இந்த ஆண்டு பள்ளிக்கூடம் திறக்கப்படாத நிலையிலும் கடந்த ஆண்டினை விட அரசு பள்ளிக்கூடங்களில் அதிக மாணவர்கள் சேர்க்கை இருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் அரசு பள்ளிக்கூடங்களின் தரத்தை மேம்படுத்தவும், பெற்றோர்கள், மாணவ-மாணவிகளின் நம்பிக்கையை பெறவும் அரசு பள்ளிக்கூடங்களில் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.
அரசு பள்ளிக்கூடங்களுக்கும், தனியார் பள்ளிக்கூடங்களுக்கும் வேறுபாடு என்று பார்த்தால் முதல் விஷயமாக கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள். இந்த விஷயத்தை கடந்த சில ஆண்டுகளில் தமிழக அரசு அதிக அளவில் நிறைவேற்றி இருக்கிறது. பள்ளிக்கூடங்களுக்கு புதிய கட்டிடங்கள் அதிக அளவில் கட்டப்பட்டு உள்ளன. தனியார் பள்ளிக்கூடங்களுக்கு இணையான அல்லது அதற்கும் அதிகமாக ஸ்மார்ட் வகுப்பறைகள் அரசு பள்ளிக்கூடங்களுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன.
சத்துணவில் மாற்றம் கொண்டு வரப்பட்டு உள்ளது. கலவை சாதம் உள்ளிட்ட பல வகை உணவுகள் வழங்கப்படுகின்றன. காலணி முதல் கணினி வரை இலவசமாக வழங்கப்படுகிறது. ஏராளமான சலுகை மற்றும் உதவித்தொகை திட்டங்களையும் அந்தந்த பள்ளிக்கூட ஆசிரியர்களே அரசிடம் இருந்து பெற்று, மாணவ-மாணவிகளின் வங்கி கணக்கில் சேர்த்து விடுகிறார்கள். அதாவது, தனியார் பள்ளிக்கூடத்துக்கு செல்லும் மாணவ-மாணவிகளுக்கு செலவுகள் அவ்வப்போது இருப்பதுபோன்று, அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு அரசிடம் இருந்து வரவுதான் உள்ளது.
ஆனாலும் தனியார் பள்ளிக்கூடங்கள் மீது மக்களின் மோகத்துக்கு காரணம், அங்கு கற்பித்தலுக்காக நியமிக்கப்படும் மனிதவளம்.
வகுப்புக்கு ஒரு ஆசிரியர். பாடத்துக்கு ஒரு ஆசிரியர். கவனித்துக்கொள்ள ஆயாக்கள், சிறந்த தரமான கழிப்பிடங்கள் என்று பல விஷயங்கள் இருக்கும்.
அரசு பள்ளிக்கூடங்களில் ஆசிரியர் பற்றாக்குறை மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. ஆனால், அரசு தரப்பு 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தை கையில் வைத்துக்கொண்டு ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக கணக்கு காட்டுகிறது. ஆனால், ஒரு வகுப்பறைக்கு 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தை, ஒரு பள்ளிக்கே 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற கணக்கில் மாணவ-மாணவிகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியதால், இன்று தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெற்ற தொடக்க, நடுநிலைப்பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டு உள்ளன. கிராமங்களில் தற்போது இருக்கும் பள்ளிக்கூடங்களில் வசதிகள் இருந்தாலும் கற்றுக்கொடுக்க ஆசிரியர்கள் இல்லை என்பதை தெரிந்த அந்த கிராமவாசிகள் தங்கள் குழந்தைகளை பணம் செலவானாலும் போகட்டும் என்று தனியார் பள்ளிக்கூடங்களில் சேர்க்கிறார்கள். ஒரு தொடக்கப்பள்ளிக்கு தலைமை ஆசிரியர் உள்பட 2 ஆசிரிய-ஆசிரியைகள் மட்டுமே இருக்கிறார்கள். இதில் கல்வி அலுவலகங்களில் இருந்து தினசரி கேட்கும் விவரங்களுக்கு பதில் அளிக்க, கூட்டங்களுக்கு சென்று வர என்று அலுவலக வேலைக்கே சரியாகி விடும். இந்த இடைவெளியில் கற்பித்தல் பணி. 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புவரை அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே ஆசிரியர்- ஒரே நேரத்தில் பாடம் எடுப்பது சாத்தியமா?. ஆனால் அதை எல்லாம் தாண்டி, தங்கள் மாணவ-மாணவிகளுக்கு கற்பித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
இதுபோல் 6-ம் வகுப்புக்கு மேல் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் என்று அனைத்து பாடத்துக்கும் தனித்தனி ஆசிரியர்கள் வேண்டும். ஆனால் பல பள்ளிக்கூடங்களில் தமிழ் படித்தவர்கள் அறிவியல் எடுக்கிறார்கள். வரலாறு படித்தவர்கள் கணக்கு, அறிவியல் எடுக்கிறார்கள். இதனால் என்ன லாபம்.
கணினி கட்டாயமாக்கப்பட்ட நிலையில் பெரும்பாலான பள்ளிக்கூடங்களில் கணினி ஆசிரியர்கள் பணியிடம் இல்லை. பகுதி நேர ஆசிரியர்கள் சில பள்ளிக்கூடங்களில் உள்ளனர். ஆனால் அவர்களும் அடிக்கடி அலுவலக பணி தேவைக்காக எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள். இப்படி இருந்தால் குழந்தைகள் எப்படி கணினி கற்கும்.
விளையாட்டு, தொழில்கல்வி என்று வகுப்பு நேரம் ஒதுக்கப்பட்டாலும், ஆசிரியர் இல்லாத பற்றாக்குறை உள்ளது. எனவே தற்போதைய சூழலை தக்க வைக்க அரசு பள்ளிக்கூடங்களில் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். கற்பித்தலில் ஆசிரிய-ஆசிரியைகளை அதிக அக்கறை காட்ட வழிவகை செய்ய வேண்டும். தொகுப்பு ஊதிய அடிப்படையிலாவது தற்காலிக ஆசிரிய-ஆசிரியைகளை நியமித்து அரசு பள்ளிக்கூட கல்வி முறை மற்றும் தகுதியை உயர்த்த தமிழக அரசும், பள்ளிக்கல்வித்துறையும் முன்வர வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.