திருப்பூரில், இந்து இளைஞர் முன்னணியினர் ஆர்ப்பாட்டம் - நடிகர் சூர்யாவின் உருவபடத்தை எரிக்க முயற்சி

நடிகர் சூர்யாவை கண்டித்து இந்து இளைஞர் முன்னணி சார்பில் திருப்பூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது சூர்யா உருவ படத்தை எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-09-19 06:30 GMT
திருப்பூர்,

மாணவர்கள் ‘நீட்’ தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்று டாக்டர் ஆவதற்கு தயாராக உள்ளதாகவும், ஆனால் மாணவர்களை தவறாக சித்தரித்து அவர்களிடம் தற்கொலையை ஊக்குவிக்கும் விதமாக நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும், எனவே நடிகர் சூர்யா, மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், அவரை கண்டித்தும் இந்து இளைஞர் முன்னணியினர் திருப்பூர் குமரன் சிலை முன்பு நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு இந்து இளைஞர் முன்னணியின் மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். இந்து இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சண்முகம் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தின் போது நடிகர் சூர்யாவின் உருவப்படத்தை தீ வைத்து எரிக்கவும், செருப்பு மாலையை அணிவிக்கவும் முயற்சித்தனர். அதற்குள் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வடக்கு போலீசார் உருவ படத்தை பிடுங்கி சென்றனர். இதனால் போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து இளைஞர் முன்னணி சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்