குண்டர் சட்டத்தில் 3 வாலிபர்கள் கைது

நெல்லை மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2020-09-18 22:00 GMT
நெல்லை,

நெல்லை அருகே உள்ள சேதுராயன்புதூர் கஸ்பா நடுத்தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் மகாராஜன் (வயது 21), மூவிருந்தாளி வடக்கு தெருவைச் சேர்ந்த செல்லத்துரை மகன் விஜயராஜ் (29) ஆகியோர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன.

இவர்களால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும் என்று நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமர் ஆகியோர் நெல்லை மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர்.

கலெக்டர் ஷில்பா இதை ஏற்று மகாராஜன், விஜயராஜ் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மகாராஜன், விஜயராஜ் ஆகியோரை மானூர் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

திசையன்விளை அருகே உள்ள உறுமன்குளம் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுடலைகண் மகன் மணிகண்டன் (27). இவர் மீது திசையன்விளை போலீஸ் நிலையத்தில் கொலை மிரட்டல் உள்பட பல வழக்குகள் உள்ளன. இவரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, திசையன்விளை போலீசார் ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இதை கலெக்டர் ஷில்பா ஏற்று மணிகண்டனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து திசையன்விளை போலீசார் மணிகண்டனை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்