மணலூர்பேட்டை பகுதியில் சாராயம், மதுபாட்டில் விற்ற 5 பேர் கைது
மணலூர்பேட்டை பகுதியில் சாராயம், மதுபாட்டில் விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூரை அடுத்துள்ள மணலூர்பேட்டை பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் மணலூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் சந்தேகத்துக்கு இடமான பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் விற்பனை செய்ததாக ஆடுர்கொளப்பாக்கம் மாரியம்மன்கோவில் தெருவைச் சேர்ந்த கண்ணன் மகன் காமராஜ் (வயது 55), பிள்ளையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தனபால் மகன் சண்முகம்(47), சாங்கியம் கிராமம் பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்த தண்டபாணி மகன் செந்தில்குமார்(41), கோட்டமருதூர் கிராமம் பள்ளத்தெருவைச் சேர்ந்த ராஜி மனைவி ராகினி (60), பள்ளிக்கூடத்தெருவைச் சேர்ந்த காமராஜ் மனைவி குமாரி(40) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.