திருநங்கைகளுக்கு கல்வி தகுதிக்கேற்ப வேலை வழங்க ஏற்பாடு போலீஸ் சூப்பிரண்டு தகவல்
திருநங்கைகளுக்கு கல்வி தகுதிக்கேற்ப வேலை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் கூறினார்.
நாகப்பட்டினம்,
நாகை கிழக்கு கடற்கரை சாலையில் வாகன ஓட்டிகளுக்கு தொல்லை தரும் வகையில் திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்து கொண்டிருந்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் திருநங்கைகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் தலைமை தாங்கினார். மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் உமையாள் முன்னிலை வகித்தார்.
அப்போது போலீஸ் சூப்பிரண்டு கூறியதாவது:-
வேலை வழங்க ஏற்பாடு
நாகை பகுதிகளில் திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதால், இளைஞர்கள் சீர்கெட்டு வருவதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் குற்றச்செயல்களில் ஈடுபடக்கூடிய நபர்களால் திருநங்கைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. ஆகையால் இது போன்ற பிரச்சினைகள் வராமல் இருக்க பாலியல் தொழிலில் ஈடுபட கூடாது.
தற்போது கொரோனா தொற்று பரவுவதற்கும் வாய்ப்பு உள்ளது. ஆகையால் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் கல்வி தகுதியின் அடிப்படையில் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் திருநங்கைகள் கூறியதாவது:-
அரசுக்கு கோரிக்கை
மயிலாடுதுறையை தவிர்த்து, நாகை மாவட்டத்தில் மட்டும் 20-க்கு மேற்பட்ட திருநங்கைகள் உள்ளனர். இதில் 4 பேருக்கு மட்டுமே அடையாள அட்டை உள்ளது. மீதம் உள்ளவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படவில்லை. தகுதிக்கேற்ற வகையில் அரசு துறைகளில் வேலை வழங்க வேண்டும் என பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே வருமானத்திற்கு வழி இல்லாததால் திருநங்கைகள் பாலியல் தொழில் செய்து வருகின்றனர். ஆகவே திருநங்கைகளின் கல்வித்தகுதிக்கு ஏற்றவாறு அரசு வேலை வழங்க வேண்டும். இவ்வாறு திருநங்கைகள் கூறினர். கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முருகேசன், துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.