அரியலூர் மாவட்டத்தில் மேலும் 34 பேருக்கு கொரோனா தொற்று
அரியலூர் மாவட்டத்தில் மேலும் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 10 பேருக்கும், அரியலூர், தா.பழூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தலா 4 பேருக்கும், ஜெயங்கொண்டம் நகராட்சி, திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தலா 3 பேருக்கும், செந்துறை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 2 பேருக்கும், ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஒருவருக்கும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 7 பேருக்கும் என மொத்தம் 34 பேர் புதிதாக கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,378 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2,494 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
357 பேருக்கு பரிசோதனை
ஏற்கனவே மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு 37 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது 847 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 357 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.