சின்னசேலம் அருகே பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை
சின்னசேலம் அருகே பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
சின்னசேலம்,
சின்னசேலம் அருகே ராயப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி. விவசாயி. இவரது மனைவி பாஞ்சாலி. இவர்களுடைய மகள் கீர்த்திகா (வயது 16). இவர் மேல்நாரியப்பனூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் கீர்த்திகா வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் இவர் வீட்டு வேலைகளை செய்யாமல் இருந்ததாக தெரிகிறது. இதை பார்த்த பாஞ்சாலி அவரை கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த கீர்த்திகா விஷத்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் கீர்த்திகா இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுரளி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தாய் திட்டியதால் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.