வேலூர், திருவண்ணாமலையில் கொரோனாவுக்கு 7 பேர் பலி

வேலூர், திருவண்ணாமலையில் கொரோனாவுக்கு 7 பேர் பலியானார்கள்.

Update: 2020-09-17 10:00 GMT
வேலூர்,

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 76). இவர் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த மாதம் 25-ந் தேதி வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஆந்திர மாநிலம் சித்தூர் கெங்கரெட்டிபள்ளியை சேர்ந்த லட்சுமிபதிரெட்டி (52) என்பவர் கடந்த 14-ந் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

இதுகுறித்து ராணிப்பேட்டை மற்றும் ஆந்திர மாநில சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் 2 பேரின் உடல்களும் முழுபாதுகாப்புடன் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 53 வயது ஆண், 70 வயது முதியவர், 70 வயது மூதாட்டி ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதேபோல் சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் சேர்க்கப்பட்ட திருவண்ணாமலையை சேர்ந்த 70 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வேலூர் தனியார் மருத்துவ கல்லூரியில் கொரோனா பாதிப்பால் சேர்க்கப்பட்ட திருவண்ணாமலையை சேர்ந்த 58 வயது பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதன்படி வேலூர், திருவண்ணாமலையில் மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் செய்திகள்