வேளாங்கண்ணியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் பிரவீன் நாயர் ஆய்வு
வேளாங்கண்ணியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் பிரவீன் நாயர் ஆய்வு செய்தார்.
வேளாங்கண்ணி,
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடிகால் சீரமைப்பு பணிகளை கலெக்டர் பிரவீன் நாயர் ஆய்வு செய்தார். வேளாங்கண்ணி பஸ் நிலையம், செபஸ்தியார்நகர், பூக்காரத்தெரு, சுனாமிகுடியிருப்பு ஆகிய பகுதிகள் மிகவும் தாழ்வான பகுதிகள் ஆகும், ஆர்ச் மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தாழ்வான இந்த பகுதியில் மழை நீர் பாய்வதால் மழைநீர் தேங்கி மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். எனவே செபஸ்தியார் நகரில் இருந்து பஸ் நிலையம் வரை செல்லும் வாய்க்காலை தூர் வாரி மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆய்வு
மேலும் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கும் பணியையும், மின் புதைவட கம்பி புதைக்கும் பணியையும் கலெக்டர் ஆய்வு செய்தார். தொடர்ந்து வேளாங்கண்ணி பேரூராட்சி பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது பேரூராட்சிகள் உதவி இயக்குனர் மாஹிம், உதவி செயற்பொறியாளர் (தமிழ் நாடு குடிநீர், வடிகால் வாரியம்) மோகன்தாஸ், உதவி பொறியாளர் விக்னேஸ்வரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரன், கீழ்வேளூர் தாசில்தார் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.