கோவிலில் புகுந்து ஐம்பொன் சிலையை தூக்கிச்சென்ற கொள்ளையர்கள் ஆட்களை கண்டதும் முட்புதரில் வீசி விட்டு தப்பி ஓட்டம்
அந்தியூர் அருகே கோவிலில் புகுந்து ஐம்பொன் சிலையை தூக்கிச்சென்ற கொள்ளையர்கள் ஆட்களை கண்டதும் அதனை முட்புதரில் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
அந்தியூர்,
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பட்லூரில் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த வாகீஸ்வரர் கோவில் உள்ளது. இது இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்டதாகும். இந்த கோவிலின் பூசாரியாக அதே பகுதியை சேர்ந்த தண்டபாணி என்பவர் உள்ளார். இவர் தினமும் காலை 6 மணிக்கு கோவில் நடையை திறந்து பூஜை நடத்தி விட்டு இரவு 8 மணிக்கு நடையை அடைத்துவிட்டு செல்வார்.
அதேபோல் நேற்று முன்தினம் பூசாரி வழக்கம்போல் கோவில் நடை திறந்து காலையில் பூஜை செய்தார். பின்னர் மதியம் 12 மணி அளவில் பூஜை முடிந்ததும் வீட்டுக்கு சென்றுவிட்டார். அதன்பின்னர் மாலை 6 மணி அளவில் பூஜை செய்வதற்காக மீண்டும் கோவிலுக்கு சென்றுள்ளார்.
ஐம்பொன் சிலை
அப்போது கோவிலில் உள்ள 3 கதவுகளில் ஒரு கதவு திறந்து கிடந்தது. இதனால் அவர் உள்ளே சென்று பார்த்தார். அங்கு கருவறையில் பூஜை, அலங்கார பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் கருவறையில் இருந்த ஐம்பொன்னால் ஆன சாமி சிலையையும் காணவில்லை. பெயர்த்து எடுக்கப்பட்டு இருந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
உடனே இதுபற்றி கோவில் செயல் அலுவலர் பிரேமாவுக்கு தகவல் கொடுத்தார். இதுகுறித்து அவர் வெள்ளித்திருப்பூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் கோவிலுக்கு சென்று சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் சாமி சிலையை தேடிச்சென்றனர். அப்போது சாமி சிலை அருகே உள்ள முட்புதரில் வீசப்பட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
முட்புதரில் வீச்சு
நேற்று முன்தினம் மதியம் பூசாரி கோவில் நடையை சாத்திவிட்டு சென்றதை கொள்ளையர்கள் நோட்டமிட்டுள்ளனர். பின்னர் கோவில் சுற்றுச்சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்துள்ளனர். கருவறைக்குள் புகுந்து ஐம்பொன் சிலையை பெயர்த்து எடுத்துள்ளனர். கோவிலின் உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்த ஒரு கதவை திறந்து தப்பித்து வெளியே சென்றுள்ளனர். அப்போது அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் சாமி சிலையை அருகே உள்ள முட்புதரில் வீசிவிட்டு மர்மநபர்கள் தப்பித்து சென்று இருக்கலாம் என போலீசார் கூறுகிறார்கள்.
இதுபற்றி அறிந்ததும் கைரேகை நிபுணர்களும் கோவிலுக்கு வந்து கை ரேகைகளை பதிவு செய்தனர். கோவிலில் தொங்கும் மணியுடன் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமரா யாராவது கோவில் கதவின் பூட்டை உடைத்தால் அலாரம் எழுப்பும். ஆனால் கேமராவும் கடந்த சில நாட்களாக இயங்காமல் இருந்துள்ளது. மேலும் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கோவிலில் இருந்த பூஜை பொருட்களும் திருடப்பட்டு உள்ளது.
வலைவீச்சு
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐம்பொன் சிலையை பெயர்த்து எடுத்து முட்புதரில் வீசிவிட்டு தப்பிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
பட்டப்பகலில் கோவிலில் புகுந்து ஐம்பொன் சாமி சிலையை கொள்ளையர்கள் பெயர்த்து எடுத்த துணிகர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.