இன்று ‘நீட்’ தேர்வு: நெல்லை - தென்காசியில் 20 மையங்களில் போலீஸ் பாதுகாப்பு

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று ‘நீட்’ தேர்வு நடைபெற உள்ள 20 மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Update: 2020-09-12 23:25 GMT
நெல்லை,

மருத்துவ படிப்பில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் நடக்கிறது. இதில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 20 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. இந்த மையங்களில் மொத்தம் 7 ஆயிரத்து 460 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். இந்த தேர்வை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது.

மேலும் கொரோனா தொற்று பரவாமல் இருக்க தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்கக்கூடிய அளவிற்கு இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. தேர்வு மையங்கள் அனைத்தும் சுத்தப்படுத்தப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. தேர்வு மையகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தேர்வு மையங்களில் குடிநீர், மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. தேர்வு மையங்களுக்கு அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

முககவசம் கட்டாயம்

தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் தேர்வு தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பே தேர்வு அறைக்கு வரவேண்டும்.

செல்போன் எடுத்து வரக்கூடாது. தேர்வு மையத்திற்கு பெற்றோர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

மாணவ- மாணவிகள் முககவசம் கட்டாயம் அணிந்து இருக்க வேண்டும்.

தேர்வு அறைக்கு செல்லும் முன் நன்றாக கைகழுவி செல்லவேண்டும்.

தேர்வு மையம் முன்பு சானிடைசர் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்