நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

Update: 2020-09-12 22:49 GMT
புதுச்சேரி,

மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் இருந்து இதில் கேள்விகள் கேட்கப்படுவதால் மாணவ-மாணவிகள் சிரமப்படுகின்றனர். இதற்கு பயந்து மனஉளைச்சலுக்கு ஆளாகும் மாணவ, மாணவிகள் சிலர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

எனவே நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், மாணவர் அமைப்புகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக புதுவை காமராஜர் சிலை அருகே ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க தலைவர் ஜெயபிரகாஷ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் ஆனந்த் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் மாணவர் சங்க செயலாளர் விண்ணரசன், வாலிபர் சங்க பொருளாளர் பாஸ்கர் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.


மேலும் செய்திகள்